இக்பால் அலி-
அரபுலகில் திறன் மற்றும் முன்னேற்றப் பாதையில் செயற் திறன்மிக்க ஆளுமைமிக்க சாதனையாளர்கள் 50 பேரைத் தெரிவு செய்யும் விடயத்தில் இலங்கை பறகஹதெனிய பிறப்பிடாமாகவும் சவூதி அரேபிய்யாவை வதியிடமாகவும் புனித மக்கா ஹரத்தில் குர்ஆன் மற்றும் புத்தக வெளியீட்டுப் பிரிவின் தலைமைவராகக் கடமையாற்றும் பிரபல்யமிக்க அஷ்ஷெய்க் முஹம்மது ரியாழ் ஸெய்லானி சாதிக் ஹாஜியார் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வு சவூதி அரேபியாவில் 05-12-2016 இடம்பெற்றுள்ளது.
அரபுலக 14 பல்லைக்கழகங்களும் மற்றும் பல கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்திய தெரிவில் பொறுப்பு சார்ந்த விடயம் தொடர்பாக காத்திரமான பணிகளைச் செய்து குர்ஆனை நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு எற்ப இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிக் கொணர்வதிலும் பங்களிப்புச் செய்தமைக்காக இந்த பெரும் மதிப்புக்குரிய சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்ட் கவன்சில் ஒவ் இம்ருமென்ட் இன்சுடிடனல் டெவலப்மெனட் என்ற அமைப்பினால் அரபு உலகத்திலுள்ள 50 திறன் மற்றும் முன்னேற்றப்பாதையில் செயற் திறன்மிக்க பல்துறை சார்ந்த பன்முக ஆளுமைமிக்க சாதனையாளர்களுக்கான தெரிவினை நடத்தினர். இந்தத் தெரிவில் மக்கா ஹரத்தில் குர்ஆன் மற்றும் புத்தக வெளியீட்டுப் பிரிவின் தலைமைவராகக் கடமையாற்றும் பிரபல்யமிக்க அஷ்ஷெய்க் முஹம்மது ரியாழ் ஸெய்லானி சாதிக் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டுள்ளமை என்பது சவூதி அரேபியா நாட்டுக்கும் மட்டுமல்ல எமது இலங்கை மண்ணுக்கும் பெருமை தேடித் தந்த ஒருவராவர்.
இவர் புனித மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரத்தில் குர்ஆன் மற்றும் வெளியீட்டுப் பிரிவின் தலைவரான இவர் குர் ஆன் கற்கை நெறியை இணையத்தளத்தின் ஊடாக அறிமுகப்படுத்தி பாடங்களைப் போதித்து வந்த இவரது குர்ஆனின் பரப்புரை பணியும் பொறுப்பு வாய்ந்த செயற்பாடும் இரண்டறக் கலந்து இருந்தது. அவருடைய பணியை கோடிட்டுக் காட்டுதவற்காகவே இந்த சான்று கிடைக்கப் பெற்றுள்ளது ஈண்டு குறிப்பிட முடியும்.
