அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை கல்வி வலயத்தில் உள்ள முன் பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு ஜெய்கா நிறுவனத்தின் அனுசரணையுன் ஒரு நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை செயலமர்வொன்று நேற்று 15 வியாழக்கிழமை திருகோணமலை குவாடலுப்பே முன் பள்ளி பாடசாலையில் இடம்பெற்றது.
திருகோணமலை கல்வி வலய கள உத்தியோகதர் சர்மிளா விக்னேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் 50 முன் பள்ளி பாடசாலை ஆசிரியைகள் கலந்து சிறப்பித்தனர்.
இச் செயலமர்வில் ஜெய்கா நிறுவன தொண்டர்களான அசமி சங் மற்றும் யுமிய சங் ஆகியோர் வளவாளர்களாக சிறப்பித்தனர்.


