கல்குடா மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு முதலமைச்சரின் நிரந்தரத் தீர்வு..!

ல்குடா பிரதேசத்தின் குழாய்க் குடிநீர் திட்டத்துக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையிலான பாரிய நிதியொதுக்கீடு கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட் அவர்களின் முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது.

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பேரில் கல்குடா பிராந்தியத்துக்கான குடிநீர் வழங்கல் வேலைத்திட்டத்துக்காக 370 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாழைச்சேனை விஷேட நீர் விநியோகத் திட்டத்திற்கு மேலும் 170 மில்லியன் ரூபா நிதி அதே அமைச்சினூடாக முதலமைச்சரின் முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதனூடாக கல்குடா பிரதேசமானது மிக நீண்டகாலமாக அனுபவித்துவந்த குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -