பெருந்தோட்ட சமூகத்தின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கை திட்டம்..!

க.கிஷாந்தன்-
பெருந்தோட்ட சமூகத்தின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கை திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டம் 30.11.2016 அன்று டிக்கோயா வனராஜா தோட்டத்தில் இயங்கும் பிரஜாசக்தி நிலையத்தில் நடைபெற்றது.

இதில் பிரிடோ நிறுவன திட்ட இயக்குனரும் மலையக சிந்தனை குழாம் உறுப்பினருமான எஸ். கே. சந்திரசேகரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும், அட்டன் பொலிஸ் உத்தியோகத்தர், தாதிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரிடோ நிறுவன திட்ட இயக்குனரும், மலையக சிந்தனை குழாம் உறுப்பினருமான எஸ். கே. சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில்,

பிரித்தானிய ஆட்சி காலத்தில் எப்படி பிரிந்து மக்களை பிரித்துவிட்டு தங்களின் அதிகாரத்தினை எவ்வாறு செலுத்திகொண்டு சென்றார்களோ அதேபோன்று அதே சிந்தனையில் அதே கட்டமைப்பில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பதனால் நாம் இன்னும் வாழவில்லை குழம்பிபோன கூட்டமாக வாழ்ந்து கொண்டியிருக்கின்ளோம்.

இவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

நாட்டுக்காக உழைத்த ஒரு சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை முதுகெழும்பாக தனது உடம்பில் ஏற்றிக்கொண்டு பாரத்தினை சுமந்து கொண்டு சென்ற சமூகம் இன்று உரிமையற்று குழம்பி போன சமூகமாக இருக்கின்றோம் என்றால் நாம் அனைவரும் துக்கப்படவேண்டிய விடயமாகும். 

இன்று இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினை சேர்ந்தவர்கள் காணி மற்றும் வீட்டு உரிமையுடன் வாழ்கின்றனர்.

ஆனால் எமது சமூகம் 200 வருடங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற போதிலும் ஒரு பிடி மண் தமக்கு சொந்தம் இல்லை என வாழ்ந்து மடிவது எந்த விதத்தில் நியாயமாகும்.

இதுவரை காலமும் உரிமைக்காக எமது சமூகம் போராடியது கிடையாது எமது தலைவர்களும் இதனை முன்னெடுக்கவில்லை. சலுகைக்காக மாத்திரமே அப்பாவியான தோட்ட தொழிலாளர்களை வீதிக்கு இறக்கினார்களே தவிர உரிமைகளை பெற்று மற்றவர்களுடன் வாழ கற்றுக்கொடுக்கவில்லை.

இதன் காரணமாக இன்றும் மற்றவர்களிடம் கை ஏந்த வேண்டிய நிலையில் நாம் வாழ்கின்றோம். இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் மலையகத்தில் பலவேறுப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபடுகின்றது.

கடந்த காலங்களில் லயன் வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் தற்போது தனி வீட்டில் ஏழு பேர்ந் காணியுடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளை அமைத்து கொடுக்க முன்வந்துள்ளது.

இத்திட்டத்தினை முன்னெடுக்க அமைச்சர் திகாம்பரம் அதிக அக்கறை காட்டிவருவதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய விடயங்கள் உள்ளன. குறிப்பாக தனி வீடுகள் அமைத்தல், சுத்தமான குடி நீர் பெற்றுக்கொடுத்தல், பாதை புணரமைப்பு, சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைத்தல், தொழில் வாய்ப்பு போன்ற வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மேற்கொள்ள நாம் அனைவரும் முன்வரவேண்டும் என மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -