அந்த நாள் மீண்டும் வருமா..?

றைவன் படைப்பு என்பது மிகவும் அருமையானது. இறைவன் வானத்தையும் பூமியையும் எவ்வித தூனுமின்றி நிறுத்தி வைத்திருக்கின்றான். வானம் பூமி அண்ட சராசரங்களையும் படைத்து அதில் பல கோடி வஸ்துக்களையும் படைத்து பலகோடி ஜீவராசிகளையும் படைத்த இறைவன் அவை அனைத்தையும் விட மிகவும் அருமையாக பெருமையாக அன்பும் அறிவும் ஆற்றலும் அழகும் பேச்சு திறனும் உடைய ஓர் உன்னதமான படைப்பாக மனித கோடிகளை படைத்து உலகத்தை அழகு பார்ப்பவன் இறைவனாகும்.

மனித வாழ்வியல் திட்டங்களை கணக்கிட்டு செயல் படுவதற்காக காலத்தை படைத்தான் இறைவன் இக்காலங்களின் சிறப்பும் பெருமையையும் எம்மால் எளிதாக கூறிவிட முடியாது

‘நேரம் பொன் போன்றது’ என்பார்கள் பெரியோர். Time is money என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது, காலம் என்பது செல்வம் எனும் பொருளில். காலத்தைச் சேமித்தல் என்பது செல்வம் சேர்த்தல். பொன்னும் பணமும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் தொலைந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். அது கடந்த காலம்; இறந்து போன காலம்.

‘ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்’ என்பது மானுடர்க்கு மட்டும் இல்லை. காலத்துக்கும் சேர்த்துத்தான். போனால் வராது. தொலைந்தால் தேட இயலாது. காலம் என்பது சக்கரம் போலச் சுழல்வது. மேலே இருப்பதைக் கீழே கொண்டு வந்துவிடும். கீழே இருப்பதை மேலே கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

எனவே வம்புக்கு, வீணாகக் காலத்தை விரயம் செய்வது வாழ்க்கையின் பகுதியைக் காணாமற் போக்குவதற்கு ஒப்பானது.  காலத்தை படைத்தவனே அதை நாட்களாகவும் கணக்கிட்டு செயல்படுத்திக் காட்டி இருக்கிறான் இன்னும் பனிரெண்டு மாதங்களையும் அதில் நான்கு மாதங்களையும் சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான் இறைவன்.

இறைவனின் வாக்கு பிரகாரம் அவன் இந்த உலகத்தை சனிக்கிழமை நாளை தவிர மற்ற ஆறு நாட்களில் படைத்ததாவும் இறைமறை போதிக்கிறது... எனவே தான் நாம் பெற்றிருக்கும் காலம் என்பது பொன்னானதாகும்.

நமக்கு கிடைத்த கால எல்லையை எவ்வாறு கழித்தோம் அதை எவ்வாறு வென்றெடுத்தோம் எவ்வாறு வென்றெடுப்பது. நமை விட்டு கழிந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் நம் ஆயுளின் தரத்தையே குறைத்து கொண்டிருக்கிறது அது எம்மை எச்சரித்துக்கொண்டும் நச்சரித்துக்கொண்டுமே இருக்கிறது.

சூரியனும் சந்திரனும் இறைவன் நிர்ணயம் செய்த காலக்கோட்டில் சுழன்று கொண்டிருக்கும் காட்சியோ மிக அதிசயமானதாகும். இது மனிதன் சந்திக்கும் இரவு பகளையும் காலம் கழிந்து செல்வதையும் சுட்டிக்காட்டும் அதிசயமாகும். புரியாத மனிதனோ மனம் போன போக்கில் வாழ்ந்து விட்டு வருட இறுதியில் தன் கண்களை கசக்கி பார்க்கிறான் பிறக்கிறது புதிய வருடம் போன்று இருக்கிறதே!

ஐயோ நான் என்னன்னவெல்லாம் சாதிக்கலாம் என்று கற்பனை செய்திருந்தேன் என்னால் எதையும் சாதிக்க முடியாது போய் விட்டதே என தலையில் கை வைத்து ஒப்பாரி வைக்கிறான். இப்போது கழிந்த காலங்களை எண்ணி வேதனை அடைகிறான். மீண்டும் அந்த சுவையான நாட்களை எண்ணி உருவுகிறான். இப்போது புலம்பி என்ன பயன்? 

எனக்கொரு நினைவு வருகிறது..

ஒரு நாள் ஒருவயோதிபர் கூனிய நிலையில் பூமியை பார்த்தபடி தல்லாடி நடந்து கொண்டிருக்கும் சமயம் அவரைக்கண்டு இளைஞன் ஒருவன் கேளிக்கையாக..

என்ன பெரியவரே தேடுதேடுகிறீர்..? எனக் கேட்க

உடனே அவரும் தொலைத்து விட்ட என் இளமையைத் தேடுகிறேன். என சட்டென்று பதில் சொன்னார் அந்த பெரியார். 

நகைக்கக்கூடிய கேள்விக்குள் யதார்த்தம் நிறைந்த அழகிய பதில் புதைந்து கிடந்தது.

எனவே நாம் எமது இளமைக் காலத்தை வீணடித்து விட்டு காலம் கடந்த யோகம் காணாது சிந்திப்பதற்கான அந்த பெரியாரின் உயிரோட்டமுள்ள பதிலாக இருக்கிறது நாம் பிறந்த முதல் இன்று வரை எதை சாதித்தோம் தற்போது நமது பயணத்தின் எல்லை என்ன எதை நோக்கிய பயணமாக இருக்கிறது எதை நோக்கி நாம் பயணிக்கிறோம் நமது பயணத்தின் முடிவு என்ன?

எங்களுடன் ஒட்டி உறவாடிய உறவுகளில் ஒரு கோடிப்பேர் எங்கே? ஆட்சி அதிகாரத்தில் ஆடி மகிழ்ந்த துர்க்குணர்கள் எங்கே? மனித நேயமும் மக்கள் திலகமாய் வாழ்ந்தவர்கள் எங்கே? சரித்திரம் படைத்த சானக்கியர்கள் எங்கே?

எண்ணற்ற படைப்புகளிலும் தன்நிகரில்லா படைப்பாளனாகிய இறைவன் அவர்களுக்கு அழித்த கால எல்லை முடிந்தவுடன் அவர்கள் இப்போது கல்லறையில் தூங்க வைத்திருக்கிறான் இறைவன்.

அவர்கள் ஆறடி நிலத்துக்கு மட்டுமே சொந்தக்காரர்கள் ஆனார்கள் இன்னும் சில காலம் செல்ல அதில் இன்னொரு சடலத்தின் சமாதியாகிவிடுகிறது. 

எனவே நாம் நமக்காக கிடைத்த காலத்தை பொன்னாக பயன் படுத்தி நமை விட்டு கழிந்து செல்லும் ஒவ்வொரு நொடிகளும் மருந்தென எண்ணி நமது காலத்தை அளந்து நிர்ணயித்து பயன் படுத்து வோமேயானால் பின்னர் கைசேதப்பட்டு தலையில் கைவைத்து அழத்தேவையில்லை.

அழகும் மெழுகும் காலத்தின் நிலைதனைக்காட்டும் ஒரு கண்ணாடி எனவும் பார்க்கலாம் அழகும் மெழுகும் உருகுவது போல் நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் காலங்களும் கரைந்து கொண்டே இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா?

والعصر ان الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا با الصبر

"காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஸ்டத்திலே இருக்கிறான்.

இறைவனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வதுடன் உங்களில் ஒருவருக்கொருவர் உண்மையைக்கொண்டு ஒத்தாசையாக இருப்பவர்களையும். இன்னும் பொறுமையைக் கொண்டு ஒத்தாசையாக இருப்பவர் களையும் தவிர" என்பதாக இறைவனின் திரு வாக்கியம்.

மனித வாழ்வியல் பாடத்திட்டத்தின் அடிப்படை காரணிகளையும் இதில் தாண்டோண்டித்தனமாக காலத்தை வீண் செய்தவர்கள் நிலை பற்றியும் குறிப்பிடும் இவ்வாக்கியம் மனித கோடிக்கு சிறந்த படிப்பினையே. 

இறை நம்பிக்கை, நற்பணிகள் மனிதர்கள் மீது இரக்கம்,வாழ்வியல் வழிகாட்டல் மனிதன் துன்பத்தில் ஆழ்ந்த போது அவனுக்கு ஆறுதலாகவும்,அனைத்து சகிக்க முடியாத நிலையிலும் பொறுமை அவசியம் எனவும் இவைகள் யாவும் மனிதன் செயல் படுத்தாமல் காலத்தை வீணடித்து மனிதன் நஸ்டவாளி என்பதையே அது கூறும் படிப்பினையாகும்.

எனவே நமது வாழ் நாட்களை பயன் மிக்கதாக கணக்கிட்டு கழிக்க பழகவேண்டும் இறைவன் நமக்களித்த காலத்தை எவ்வாறு செலவு செய்தாய் என்று கேட்டால் எம்மால் என்ன பதில் கூறமுடியும்?

இன்னும் உமர் றழி அவர்கள் சிறந்த ஆட்சிக்கு முன் மாதிரியாகும் அவர்கள் செய்த உபதேசம், ஐந்து விடயங்கள் உன்னை வந்து அடைவதற்குள் ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக் கொள்.

1- உன் வயோதிபம் வருவதற்குள் உன் இளமையை பயன்படுத்திக் கொள்.

2-உன்னை நோய் வந்து அனுகுவதற்குள் உடல் ஆரோக்கியத்தை பயன்படுத்திக்கொள்.

3-உனக்கு வறுமை வருவதற்குள் உன் செல்வங்களை பயன்படுத்திக்கொள்.

இப்படி ஐந்து விடயங்களை சுட்டிக்காட்டினார்கள் இவை அனைத்து விடயங்களும் காலத்துக்குள்ளே சுழல்கின்றன. எனவேதான் நாம் கழித்து விட்ட காலங்களை எமக்கு ஒரு படிப்பினையாக வைத்துக்கொண்டு பிறக்கின்ற புதுவருடத்தை பொக்கிஷமாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் எல்லோரும் நமது படிக்கல்லாக இருந்தாலும் மனித நேயங்களையும் மான்புறும் வாழ்வுதனையும் படிப்பினைகளாக தந்து நன்மை தீமைகளை பிரித்தறிவித்து மரணத்தின் பின்னர் நமக்கான கல்லறை வாழ்க்கையில் இறைவன் அன்பை பெற்றிட வழி காட்டியவர்கள் நமது முன்மாதிரியாக கொண்டு நானிலம் போற்றும் நல்லவர்களாக வாழ்ந்து வரும் காலம் வசந்தங்கள் வீசிட இறைவன் தன்னுடைய தேவதைகள் மூலம் அருள் என்னும் பூக்களால் தூவி வரவேற்கும் நம் வாழ்வில் மீதமுள்ள காலங்களையாவது சிறப்பாக அமைத்துக்கொள்ள முயற்சிப்போமாக.

காலத்தை கணக்கிடும் கருமியாய் கல்லறை வாழ்கையின் லட்சியமாய் தீமைகளை வேரறுக்கும் வேங்கையாய் புயலால் சாயாத மரங்களாய் நாடும் வீடும் நலமாய் சிறக்கட்டும். நாழிகைகள் நாளையில்லை இன்றே செயல்பட முயற்சிப்போம்.

காலம் பொன்னானது. வாழ்வோம் வெல்வோம். காலத்தை வென்றவன் என்று சரித்திரம் எழுதட்டும் நமைப்பற்றி எங்கிலும்.

அன்புடன் ஆதில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -