அகமட் எஸ்.முகைடீன், ஹாசீப் யாசீன்-
கல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புதிய காரியாலயம் ஒன்றை அமைக்கத்தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (30) புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்படிவேண்டுகோளை விடுத்தார்.
பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த 20 வருடங்களாக கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியககாரியாலயம் முறையற்ற விதத்தில் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. இக்காரியாலயம்இடமாற்றப்படவுள்ளமையை அறிந்து குறித்த பணியகத்தின் மூலம் சேவையினைப் பெறும்அதிகப்படியான மக்களின் நலன்கருதி குறித்த காரியாலயத்தை இடமாற்றம் செய்யவேண்டாம் என நாம்முறையிட்டிருந்தபோதிலும் மேற்படி இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த இடமாற்றம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் மற்றும் செயற்பாட்டுபணிப்பாளர் ஆகியோர் பொறுப்பில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் செயற்பட்டதுகண்டிக்கத்தக்கதாகும். பொறுப்பு வாய்ந்த பதவி நிலையில் உள்ளவர்கள் எப்போதும் மக்கள் நலனைமுன்னிறுத்தி செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.
யுத்தம் மற்றும் சுனாமி என்பவற்றினால் பாதிக்கப்பட்ட இம்மக்களில் பெரும்பாலனவர்கள் வெளிநாட்டுதொழில் வாய்ப்பபை நாடியவர்களாக இருக்கின்றனர். இதனால் இக்காரியாலயம் கல்முனையில்செயற்படும்போது அதிகமான கிழக்கு மாகாண மக்கள் இதன் மூலம் எவ்வித சிரமங்களுமின்றி பயன்பெறுபவர்களாக இருந்தனர்.
ஆனால் இக்காரியாலயமானது எவ்வித காரணமும் இன்றி இடமாற்றப்பட்டுள்ளது. இதனால் கிழக்குமாகண மக்கள் குறிப்பாக ஓட்டமாவடி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ், முஸ்லிம் இளைஞர்யுவதிகள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே குறித்த பணியகத்தின் மூலம் சேவையினைப் பெறும் மக்களின் நலன்கருதி கல்முனையில்வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புதிய காரியாலயம் ஒன்றை அமைக்கத் தேவையானநடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
குறித்த காரியாலயத்தை அமைப்பதற்கு ஏற்ற வகையிலான அரச காணி இப்பிரதேசத்தில்காணப்படுவதோடு அதனை பெற்றுத்தருவதற்கும் நாம் தயாராக உள்ளோம் என பிரதி அமைச்சர்வேண்டுகோள் விடுத்தார்.
