எய்ட்ஸ் தினத்தில் ஏதுமறியா மழலை
+++++++++++++++++++
வாழுகின்ற மக்களுக்கு
வாழந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் விட்ட 'பிழை'
பிள்ளைகளைச் சேருமடி
'சேர்ந்து' செய்த தவறுகள்தான்
சந்ததியைத் தாக்குமடி
இந்தப் பிள்ளை என்ன செய்யும்
சொந்தத் தந்தை செய்தது தவறடி..
சீனாக்குச் செல்வார்கள் ஷொப்பிங் செய்ய-அங்கு
வீணாக விழுவார்கள் எய்ட்ஸ் நோயில்
உறவென்று சிசுவென்று வரும்போது-இந்தச்
சிறு மழலை எய்ட்ஸ் வந்து போராடும்..
முறையின்றி மறை மீறி
நடக்கின்றார்-இங்கு
வெறி கொண்டு வில்லங்கம் செய்கின்றார்
பரிதாபம் பிறக்கின்ற பிள்ளையது
ஒரு தவறான தந்தையின் தொல்லையிது..
