சுமார் 3 லட்சம் ரூபாய் காசுடனான பணப்பொதியை உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்த மாணவர்கள்.

OMSED அமைப்பு நாடளாவிய ரீதியில் Kids Gathering நிகழ்ச்சியை இம்மாதம் நடாத்தி வருகிறது. அந்த வகையில் கல்கமுவையின் ESDA நிறுவனத்தின் மாணவர்கள் புத்தளத்தில் இடம் பெற்ற எமது நிகழ்ச்சியில் பங்குகொண்டார்கள். 

நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பிய மாணவர்கள் கல்கமுவையில் வைத்து வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த போது ஒரு பணப் பையைக் கண்டெடுத்துள்ளனர். அதனை எவ்வாறு உரிமையாளரிடம் கொண்டு சேர்க்கலாம் என அவர்கள் தமக்குல் ஆலோசனை செய்தனர். பின்னர் இதனை பள்ளி வாசலுக்கு கொண்டு செல்வோம். அங்கு பலரும் இருப்பார்கள் என முடிவு செய்துள்ளனர். அதன் படி பள்ளி வாசலுக்கு கொண்டு போய் அங்கிருந்த மூத்தவர்களிடம் அதனை ஒப்படைத்துள்ளனர். 

எமது சமூகத்தில் இவ்வாறான மாணவர்கள் இருப்பது எமக்கு பெருமைதான். வல்ல அல்லாஹ் அந்த மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவானாக. அவர்களது பெற்றோருக்கு அருள் புரிவானாக. ESDA நிறுவனத்திற்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -