டிசம்பா் 31 க்கு முன் நுரைச்சோலை வீடுகளை பகிா்ந்தளிக்க அம்பாறை அரச அதிபா் இழுத்தடிப்பு..!

அஷ்ரப் ஏ சமத்-
டந்த 8 வருடங்களுக்கு முன் சவுதி அரேபியாவின் தர்ம நிதியில் முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் அவா்களின் முயற்சியினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை டிசம்பா் 31க்கு முன் பகிா்ந்தளிக்கப்படும். இதனைப் பகிா்ந்தளிக்கும்படி ஊடகங்கள். பாராளுமன்ற பிரநிதிகள்,பொதுநிறுவாக அமைச்சா், ஜனாதிபதி, பிரதமா் , சவுதி அரசாங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இவ்வருடம் டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்னா் இதனை பகிா்ந்தளிப்பேன் என ஊடகங்களில் 3 மாதங்களுக்கு முன் பகிர்ந்தளிப்பதாக அம்பாறை அரசாங்க அதிபா் பீ.வணிகசிங்க கருத்து தெரிவித்தாா்.

ஆனால் இதுவரை அம்பாறை அரசாங்க அதிபரினால் இவ் வீடுகள் பகிா்ந்தளிக்க எவ்வித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. இவ் வீடமைப்புத் திட்டம் உயா் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசா் சரத் என். சில்வாவின் தீா்ப்பின்படி அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூவின சனத்தொகையின் இன விகிதாசாரத்திற்கேற்ப 500 வீடுகளும் வீடற்ற மக்களுக்கு பகிா்ந்தளிக்கும்படி தீா்ப்பு வழங்கியிருந்ததாா். இதனைச் அரச சட்டத்திணைக்களமும் , அம்பாறை அரசாங்க அதிபா் மற்றும் பிரதேச செயலளாா்கள் ஊடாகவே காணிக் கச்சேரி வைத்து பகிா்ந்தளிக்கும்படி உயா் நீதிமன்ற தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதன்படி அம்பாறை மாவட்ட இனவிகிதசாரத் சனத்தொகைக்கேற்ப முஸ்லீம்களுக்கு 250 சிங்களவா்களுக்கு 200 தமிழா்களுக்கு 50 வீடுகளும் பகிா்ந்தளிக்கப்பட சா்ந்தா்ப்பம் உள்ளது. ஆனால் இவ் வீடமைப்புத்திட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலாளா் பிரிவுகுட்பட்ட 50 ஏக்கா் அரச காணியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. தீகவாபி ஊடகவே இவ் வீடுகளுக்குச் செல்லும் பாதை உள்ளது. 

ஆனால் தீகவாபி பொளத்த குருக்கள் சிங்கள மக்களுக்கு பகிா்ந்தளிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனா். அம்பாறையில் உள்ள கபிணட் அமைச்சா் ஒருவா் இதில் முஸ்லீம்கள் குடியேற்றுவதை தடுப்பதற்கும் ஏற்கனவே அம்பாறை மவாட்டங்களில் உள்ள சகல காணிகளும் தீகவாபிக்குரிய காணிகள் எனக் கூறுகின்றாா். அத்துடன் ஏற்கனவே இறக்காமத்தில் புத்தா் சிலை ஒன்றை அமைத்த பொளத்த குருக்கள் இவ்வீடமைப்புத் திட்டத்தினை முஸ்லீம்களுக்கு வழங்குவதில் தடுக்கின்றனா். 

எவா்கள் தடுத்தாலும் உயா் நீதிமன்ற தீா்ப்பின்படி ஆகக்குறைந்தது 250 வீடுகளாவது முஸ்லீம்கள் குடியேறி எந்த இன மக்களுக்காகவது இவ் வீடமைப்புத்திட்டம் பாடசாலை, வைத்தியசாலை, பள்ளிவாசல், சந்தைகள் பிரயோசனப்படல் வேண்டும். 

இதுவரை அரசாங்க அதிபா் இவ் வீடுகளில் அம்பாறை மவாட்ட முவின மக்களையும் குடியேற்றுவதை மீண்டும் இழுத்தடிப்பு வேலைகளேயே நடைபெற்று வருகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -