25 முஸ்லிம் கலைஞர்களுக்கு அரச கலாபூஷண விருது..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
2016 ம் ஆண்டின் 32 வது அரச கலாபூஷணம் விருது வழங்கும்; விழா உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய பண்பாடடலுவல்கள்; திணைக்களம் என்பன ஒன்றிணைந்து இலங்கை நாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் அரச கலாபூஷணம் விருது வழங்கும் வைபவமானது கடந்த 23ஆம் திகதி கொழும்பு 7 லிலுள்ள தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ உள்ளக கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும ஆகியோருடன் அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் டீ.சுவர்ணபால, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அனூஷா கோகுல பெர்னாண்டோ, இந்துசமய கலாசாரப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமட் நஷீல், புரவலர் ஹாசிம் உமர், கொடகே நிறுவனத் தலைவர், கலைச் செல்வன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு மூவினத்தையும் சேர்ந்த சுமார் 351 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகளின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சியான அராபிய பாடல் ஒன்றினை மேடையேற்றினர்.

1 ஜனாப். ஏ.எஸ்.உபைத்துல்லா - மூதூர்
துறை:-இலக்கியம்

2 எஸ். எம். ஆபூ உபைதா - முசல்பிட்டி பள்ளிவாசல்துறை
துறை:-களிகம்பு

3 ஜனாப்.எம்.ஏ.ஆதம் லெவ்வை - இறக்காமம்-08
துறை:- இசை

4 ஜனாப்.ஓ.எல்.எம்.ஆரிப் - ஹதரலியத்த
துறை:-இலக்கியம்

5 ஜனாப்.ஆதம்பாவா மீராசாய்பு - திருகோணமலை
துறை:-இலக்கியம்,நாடகம்,ஊடகத்துறை

6 ஜனாப்.எம்.தம்பிராசா - சம்மாந்துறை-02
துறை:- இலக்கியம், நாடகம், இசை,கட்புலக்கலை, நடனம்

7 ஜனாப்.ஏ.எல்.முகம்மது அமீன் - நிந்தவூர்
துறை:- இலக்கியம் நாடகம்,இசை, ஊடகம்

8 ஏ.ஸி.அப்துல் றகுமான் - ஏறாவூர்-06
துறை:-இலக்கியம், நாடகம்

9 முஹம்மது காஸிம் முஹம்மது அலி(ஜே.பி) - கொழும்பு-13.
துறை:-இசை

10 ஜனாப்.ஏ.ஆர்.அப்துல் ஹமீட் - மருதமுனை-02
துறை:- இலக்கியம்

11 ஜனாப்.எஸ்.எம்.அப்துல்அஸீஸ் - அக்கரைப்பற்று-10
துறை:- இலக்கியம் , நாடகம்

12 ஜனாப்.எஸ்.எம்.பி.முகையதீன் - காத்தான்குடி.
துறை:-இலக்கியம்

13 ஜனாப்.சிக்கந்தர் அகமது - நிந்தவூர்-12
துறை:-இலக்கியம்

14 முஹம்மது முக்தார் முஹம்மது ஹசினி - கல்முனை
துறை:-இலக்கியம்

15 ஜனாப்.எம்.எச்.எம்.ரபாய்டீன் - கொழும்பு-13
துறை:-மேடை நாடகம்

16 மொகமட் இஸ்மாயில் சாகுல் ஹமீது - இடிமன்-05, கிண்ணியா
துறை:-இசை

17 கே.எம்.எம்.நஸீர் - கொழும்பு-12
துறை:-நாடகம்

18 ஜனாப்.எம்.ஏ.நஜுமுத்தீன் - அக்கரைப்பற்று-19
துறை:- இலக்கியம்

19 அஹமது முகைதீன் கச்சி முஹம்மத் - புதிய காத்தான்குடி-02
துறை:-தற்காப்புக் கலை

20 எம்.எச்.ஏ.அப்துல் ஹலீம் - ஏறாவூர்-06
துறை:- இலக்கியம்

21 முஹம்மது இஸ்மாயில் அஹமது முஸ்தபா - பாலமுனை-11, ஆரியம்பதி
துறை:-இலக்கியம் ,இசை

22 முகம்மத் தம்பி அப்துல் கபூர் - நிந்தவூர்
துறை:- இலக்கியம்

23 ஜனாப். சேகு முஹம்மது உடையார் - வெலம்பொட
துறை:- இலக்கியம்

24 முஹம்மது அஷ்ரப் - அக்கரைப்பற்று-17
துறை:- இலக்கியம்

25 முஹம்மட் - கொடபிடிய அக்குரஸ்ஸ
துறை:-இசை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -