கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் ஆசிரியர் அனஸ் தலைமையில் திருகோணமலை மாவட்ட ஆசிரியர் சங்கம் 16.11.2016 ம் திகதி காலை 11.00 மணியளவில் திருகோணமலை முத்துவளி அப்பா தைக்கா பள்ளிவாயலில் இடம்பெற்றது
குறித்த நிகழ்வின்போது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்,குச்சவெளி,கிண்ணியா,தம்பலகாமம்,மொரவெவா,கந்தளாய்,திருகோணமலை போன்ற பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் பின்வரும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.
01. ஆசிரியர் பற்றாக்குறை
02. தேசிய பாடசாலை ஆசிரியர்களின் பதவி உயர்வு
03. அண்மையில் நியமித்த கல்வியல் கல்லூரி நியமனத்தை தேவையான
தேவையான இடங்களுக்கு நியமித்தல்
04. ஆளணி மற்றும் பௌதீக வளங்களை கொண்டு நிரப்புதல்
05. எதிர்கால பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் போது வயதெல்லையை
45 யாக உயர்த்தல்
06. பின் தங்கிய பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டங்களை
அதிகரிக்க செயற்றிட்டங்களை மேற்கொள்ளல்
07. கஷ்டப்பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை
நிவர்த்தி செய்யா அப்பிரதேசத்திலுள்ள க.பொ.தா (உ /த),(சா/த)
தகைமை உடைமையோரிடம் இருந்து போட்டிப்பரீட்சையின் மூலம்
ஆசிரியர் உதவியாளராக நியமித்தல்
08. மாவட்ட பாடசாலைகளின் உள்ளகத்தேவைகள்
09. பாடசாலைகளுக்கான கட்டிட வசதிகள்,மற்றும் ஆசிரியர் விடுதிகள்
கேட்போர் கூட்டம்,தள பாடங்கள் போன்றன
10. முறையான ஆசிரியர் இடமாற்றம்
போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் முன் வைக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரிடம் தேசிய இஸ்லாமிய ஆசிரியர் சங்க தலைவர் ஆசிரியர் அனஸ் கையளித்தார்.
குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் ,இலங்கை இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் ஆசிரியர் அனஸ்,பதில் தேசிய பொது செயலாளர் ஆசிரியர் ஜஹாங்கீர் ,திருகோணமலை மாவட்ட தலைவர் பிரதி அதிபர் சாலி,பொருளாளர் ஆசிரியர் நவ்சாத்,பொருளாளர் அதிபர் ஷஹீத்,திருகோணமலை வலைய ஒருங்கிணைப்பாளர் அதிபர் எம்.எஸ்.ஏ.காதர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.