தயா கமகேவை மீறி பிரதமர், இறக்காமம் சிலையை அகற்றுவாரா..? - நாபிர்

”இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தனித்துவத் தன்மையினை உடைத்தெறிந்து பௌத்தமயமாக்குவதில் சிங்கள அரசாங்கங்கள் ஒன்றை விட ஒன்று சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டு வந்திருப்பதே வரலாறாகும்” என நாபிர் பௌண்டேசனின் தலைவரும் பொறியியலாளருமான யு.கே. நாபிர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; 

“அண்மையில் இறக்காமம் பிரதேசத்தை அண்டியுள்ள மாணிக்கம்டுவில் அமைந்துள்ள மாயக்கல்லி மலையில் புத்தரின் சிலை திடீரென நிறுவப்பட்டது நாமறிந்ததே. இந்த நாட்டில் சிங்கள் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதற்காக வேண்டி அம்மக்கள் வாழாதும் ஏனைய முஸ்லிம் , தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களில் பௌத்த மதத்துக்குரித்தான புத்தர் சிலையையோ, விகாரைகளையோ தோற்றுவிப்பது ஒரு நாகரிகமானதும், பண்பாட்டியலுக்கும் எதிரான செயற்பாடென்பது மறைவானதல்ல. 

இவ்வாறான புதிது புதிதான புத்தர் சிலைகளை நிறுவுவது, விகாரைகளை தோற்றுவிப்பது போன்ற செயற்பாட்டின் பின்னால் நீண்ட கால சதியோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகும். இது பௌத்த பேரினவாத அடிப்படையில் பௌத்ய்தர்களுக்கு மட்டுமே இந்த நாடு சொந்தமானது என்கின்ற கற்பிதத்தை உறுதிபடுத்துவதற்காக முன்னெடுத்து வருகின்ற ஒரு நடவடிக்கை ஆகும். இவ்வாறான இனவாதச் சிந்தனைகளும் அதனோடு இணைந்த செயற்பாடுகளும்தான் நமதுநாட்டை ஒரு இனவன்முறைக்குள் தொடர்ந்தும் இருப்புக்கொள்ளச்செய்து வந்திருகின்றது. 

இது தவிர்க்கப்பட வேண்டிய செயற்பாடு என்பதிலும் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய நடவடிக்கை என்பதிலும் எமது கவனத்தை கட்டாயம் செலுத்த வேண்டியிருக்கின்ர்றது. நாட்டின் பிரதமர் ரணில் விகரம்,அசிங்ஹ ஒரு வாரத்துக்குள் மாயக்கல்லி ம்குன்றில் நிறுவப்பட்ட புத்தரின் சிலையை அகற்றுவதென்று உறுதியளித்திருய்க்கும் அதே வேளை அம்பாறை - திகாமடுல்ல மாவட்டத்தின் ஐ. தே. கட்ர்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயா கமகே சிலை அகற்றப்பட்டால் தமது அமைச்சுப் பதவியை துறப்பதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் அமைச்சரை மீறி பிரதமர் சிலையை அகற்றுவாரா? அல்லது பிரதமரை மிஞ்சி புத்தரின் சிலையை வலுப்படுத்துவாரா? என்கின்ற ஒரு சர்ச்சையும் இதில் இன்று எழுப்பப்பட்டிருக்கின்றது. 

எது எவ்வாறிருந்தாலும் பௌத்தமயமாக்கல் சிந்தனைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களின் பௌத்த மேலாதிக்கத்தை வலிமைப்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயற்படுவது இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் மதிப்பையும், நம்பிக்கையையும் சிதைக்கச்செய்யும் என்பதில் ஐயமில்லை. அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான சிங்களப் பேரினவாதம் எரிந்து கொண்டிருக்கும் ஒரு மாவட்டமாகும். குறிப்பாக தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் வயற்காணிகள் கபளிகரம் செய்யப்பட்டு எரியூட்டலாக கனன்று கொண்டிருப்பது மிகப் பிரசித்தமானதாகும்.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -