நசீர் ஹாஜி ஏறாவூர்-
இன்று அதிகாலை 03.00 மணியளவில் ஏறாவூர் பெண் சந்தை வீதியூடாக ரோந்து நடவடிக்கையில் சென்று கொண்டிருந்த மேற்படி பொலிஸ் குழுவினர், றஹ்மானியா பாடசாலையூடாக பயணிக்கும் போது குறுக்கு ஒழுங்கையில் இரு மோட்டார் சைக்கிள்கள் இருப்பதை அவதானித்ததும், அவ்விடத்திற்கு சென்று பார்த்த போது எவரும் இருக்கவில்லை.
சைக்கிள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு முன்பாகவிருந்த வீட்டாரை தட்டி எழுப்பி யாருடைய சைக்கிள் என்று கேட்க முற்பட்ட போது, எதிரே இருந்த வீடோன்றின் கூரையிலிருந்து ஒருவன் கீழே பாய, இன்னுமொருவனும் கீழே பாய்ந்து தப்பியோட முயற்ச்சிக்கையில் பொலிஸ் குழுவினர் துரிதமாக செயற்பட்டு துப்பாக்கி சூடு நடாத்தி "சலீம் " என்பவனை கைது செய்துள்ளனர்.
தப்பி ஓடியவன் " கிழவன் றியாஸ் " என்று அழைக்கப்படுபவனாம்.
இரண்டு பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிளிலேயே வந்துள்ளனர்.
பல்சர் ரக மோடட்டார் சைக்கிள், ஹீரோ பிரிமியம் மோட்டார் சைக்கிளுமே கைப்பற்றப்பட்ட சைக்கிள்களாகும்.
றஹ்மானியா பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள வீடொன்றில் ஓடொன்றை களட்டும் போதே, பொலிசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்துள்ளனர்.
அதிகாலை 04.30 மணியளவில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் அழைப்பை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்று "கிளிக் " செய்துள்ள படங்களே இவை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -