முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாப்பிற்கு அமைய கட்சியின் உறுப்பினர் ஒருவர் புதிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால் இயல்பாகவே அவரது கட்சியின் உறுப்புரிமை இரத்தாகும் என துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் தலைவர் பதவியை பெற்றுள்ள ஜீ.எல்.பீரிஸ் சுதந்திரகட்சியின் உறுப்புரிமையை இயல்பாகவே இழந்துள்ளார் என துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி கட்சியின் புதிய தலைவராக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் கூட்டு எதிர்கட்சி உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் கடந்த செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
