எமது மக்கள்மீது தீராத வஞ்சனை கொண்ட ஹகீம் மீண்டும் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தை பிரிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் எல்லைகளை சுருங்க செய்து பிரிதொரு பிராந்திய காரியாலயம் உருவாக்கி எதிர்காலத்தில் இங்குள்ள பிராந்திய காரியாலயத்தை இல்லாமல் செய்யும் முயற்சியை அமைச்சர் ஹகீம் மேற்கொண்டார்.
இதனை பனி உறைந்த நிலத்தில் சுத்தியலால் அடித்து நிறுத்தப்பட்டுள்ள, அசைக்க முடியாத ஒரு இரும்புத்துண்டு போன்ற சக்திமிக்க இளைஞர்களின் எழுச்சியினாலும், வயது வித்தியாசம் பாராமல் நம்மண்மீது பற்றுக்கொண்ட எமது சகோதர்களின் வீரமிகு ஆக்ரோஷ ஆர்பாட்டத்தினாலும் பிராந்திய காரியாலய பிரிப்பினை தடுத்து நிறுத்தினோம் –அல்ஹம்துலில்லாஹ் .
ஆனால் பகைமை உணர்வு குறைந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு அதிகம் கொடுக்கும் மக்களாகவும், மற்றவர்களைப்பற்றி அதிகம் சிந்திக்கும் மக்களாகவும் காணப்படும் எமது மக்கள் மீது தீராத குரோதம்கொண்ட அமைச்சர் ஹகீம் மீண்டும் இக்காரியாலயத்தை பிரித்து இவ்வூரின் முன்னேற்றத்தை சிதைப்பதற்கு இரகசியமான வழிகளை முன்னெடுத்துவிட்டார்.
ஓய்வு பெற்றுச்செல்ல வேண்டிய செயலாளரை பதவி நீட்டிப்பு செய்து காரியாலய பிரிப்பு தகவல்களை இரகசியமாக வைக்கச்செய்துள்ளார். கல்முனை பிராந்திய காரியாலயம் என்ற பெயரில் புதிய வாகனங்களை அனுப்பி மறைவாக பாதுகாத்து வைத்துள்ளார்.
கல்முனை மக்களுக்கும் ஹரீசுக்கும் அக்கரைப்பற்று தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையையின் பிராந்திய காரியாலயம் வேண்டுமென்றால் முழுமையாக எடுத்து கொள்ளட்டும் எங்கள் இடங்களை ஊரின் வேறுதேவைகளுக்கு நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம் ஏற்கனவே ஒன்பதுக்கு மேற்பட்ட பிராந்திய காரியாலயங்களுக்கு கல்முனைக்கு எமது மக்கள் சென்று வருவதுபோல் இதற்கும் போய்விட்டு வரலாம். ஆனால் கல்முனையில் இருந்த வேலைவாய்ப்பு பணியாக காரியாலயத்தை அம்பாறைக்கு கொண்டுசெல்லும்போது தடுத்து நிறுத்த வக்கில்லாத ஹக்கீமும் ஹரீசும்.
(UNAITA) தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஒருசில தினங்களில் அம்பாறைக்கு கொண்டு செல்லப்படப்போகின்றது அதனை தடுத்து நிறுத்த திராணியில்லாத ஹக்கீமும் ஹரீசும் இங்குள்ள காரியாலயத்தை பிரித்து கல்முனைக்கு கொடுக்க நினைப்பது எதற்காக?
பௌத்தர்கள் இல்லாத இறக்காமதின் மாணிக்க மடுவில் பலாத்காரமாக சிலை வைத்துள்ளார்கள். சிலை எங்கும் வைக்கலாம் அதனை அகற்றினால் நான் பதவி விலகுவேன் என்று தயாகமகே எச்சரிக்கின்றான்.
ஐரோப்பிய வரிச்சலுகை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் விவாக மற்று கலாச்சார சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது இவைகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முதுகெலும்பில்லாத அரவாணிகலான இவர்கள் எமது மண்ணில் உள்ளவற்றை மீண்டும் சூறையாட நினைப்பது எதற்காக?
DGM சகோதரர் றசீட் கேட்கின்றார் கல்முனை பிராந்திய காரியாலயத்தை உருவாக்குவதால் அக்கரைப்பற்று மக்களுக்கு என்ன பிரச்சினை என்று? அதேபோன்று எமது மக்களுக்கும் உங்களிடம் கேட்க கேள்வி உள்ளது. அதாவது
கிழக்கு மாகாணத்துக்கு பொதுவான இடமாகவுள்ள மட்டகளப்பு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவினால் DGM காரியாலயம் கொண்டுவரப்பட்டது அது அமைச்சு மாற்றத்தின் பின் மீண்டும் திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டது ஏன்?
மீண்டும் உமது முதகெலும்பு இல்லாத அமைச்சரை வைத்துக்கொண்டு கல்முனைக்கோ அல்லது மட்டகளப்புக்கோ DGM காரியாலயத்தை கொண்டுவர முடியாமல் இருப்பது ஏன் ?
புதிய அமைச்சராக கடமை ஏற்ற தினேஷ் குணவர்த்தன சிறிய மாவட்டமான அம்பாறையில் எதற்காக 2 பிராந்திய காரியாலயங்கள் செலவுகள் அதிகமாக உள்ளது ஒன்றாக்கி விடுங்கள் என உத்தரவு போட்டபோது அதிக நீர் இணைப்புகளை கொண்ட அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தை அம்பாரையோடு இணைக்க முடியாது விரும்பினால் அம்பாறையை அக்கரைப்பற்றோடு இணைக்கலாம் என்ற நிலை வந்தது ஆனால் அம்பாறை மக்கள் விரும்பமாட்டார்கள் என்ற காரணத்தினால் அது கைவிடப்பட்டது.
அமைச்சர் ஹகீம் அமைச்சு மாற்றம் பெற்றதன் பின் அக்கரைப்பற்றிலுள்ள காரியாலயத்துக்கு என்ன நடக்கும் என்பதனை விளங்கமுடியாத படிப்பினையா சகோதரர் றசீட் DGM அவர்கள் படித்துள்ளார் என்ற கேள்வி எங்கள் மக்கள் மத்தியில் உள்ளது?
மக்களே நீங்கள் சொல்லுங்கள்,,,
நாங்கள் என்ன செய்ய வேண்டும்
எம்மை மித்தித்துவிட்டு எம்சொத்துக்களை சூறையாடுவதை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? எமது மண்ணுக்கு அநியாயம் நடக்கின்றபோது கை கட்டி வாய்பொத்தி மௌனியாக இருக்க வேண்டுமா?
இல்லை நம் மண்ணுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்ற இளைஞர்கள், வாலிபர்கள், சகோதர்களை வைத்துக்கொண்டு அநீதிக்கு எதிராக போராடி எமது உடமைகளை காக்க வேண்டுமா?
நீங்களே சொல்லுங்கள்..?
உங்கள் உடன்பிறப்பு - SM சபீஸ்