சம்மாந்துறைக்கு மற்றுமொரு சாதனை விருது!

காரைதீவு நிருபர் சகா-

லக விஞ்ஞான தினத்தையொட்டி இடம்பெற்ற நாடளாவியரீதியிலான பாடசாலை விஞ்ஞான கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கையில் மிகச்சிறந்த விஞ்ஞான கழகமுள்ள முதல் மூன்று பாடசாலைகளில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய பாடசாலை தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

இதனை விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் தேசிய விஞ்ஞான மன்றம் என்பன ஒழுங்கு செய்திருந்தன.

இலங்கையிலுள்ள 834 பாடசாலைகள் இப்போட்டியில் கலந்தகொண்டன. 05நட்சத்திர பெறுபேற்றைப்பெற்று முதல் 03 பாடசாலைகள் தெரிவாகின.அவற்றுள் இரண்டு சிங்களமொழிமூல பாடசாலைகளாகும். முதலிடம் பெற்ற ஒரேயொரு தமிழ்மொழிமூல பாடசாலை இதுவாகும்.

இப்பாடசாலைக்கு 5நட்சத்திர விருது வழங்கப்பட்டது. அதிபர் ஏ.சி.ஏ.எம்.இஸ்மாயில் இவ்விருதை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.

விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம்ஜயந்த தலைமையில் இவ்விழா இடம்பெற்றது.

சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரி விஞ்ஞானகழகத் தலைவரான இளங்கண்டுபிடிப்பாளர் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் பாராட்டப்பட்டார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பி.எம்.ஜ.சி.எச். இல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பாடசாலைக்கு 25ஆயிரம் ருபா பரிசும் வெற்றிக்கேடயமும் ஆசிரியர் பௌசான் அகமட்டிற்கு 10ஆயிரம் ருபாவும் இளம்கண்டுபிடிப்பாளர் தெரிவில் முதலிடம்பெற்ற மாணவன் சோ.வினோஜ்குமாருக்கு 09ஆயிரம் ருபாவும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

விஞ்ஞான தொழினுட்ப அமைச்சர் சுசில்பிரேம்ஜயந்த இராஜாங்கஅமைச்சர் லக்ஸ்மன்செனிவிரத்ன தேசிய விஞ்ஞான மன்றதலைவர் ஆகியோர் இப்பரிசுகளை வழங்கினர்.

பாடசாலையின் அதிபர் எ.சி.எ.எம். இஸ்மாயில் (முத்து) பிரதிஅதிபரும் கழகஅதிபருமான ஜனாபா நஜீபா றகீம் கழகஆசிரியர் திருமதி எம்.எ.எவ்.என்.சிப்னாஸ் விஞ்ஞானகழகத்தலைவர் சோ.வினோஜ்குமார் செயலாளர் எம்.மில்கான் ஆகியோர் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவற்றை விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சிஅமைச்சு தேசிய விஞ்ஞான மன்றம் என்பன ஒழுங்கு செய்திருந்தன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -