மாணவர்களுக்கு டெப் வழங்கப்படும் - பிரதமர்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு டெப் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் தற்போது நடைபெற்று வரும் ஜேர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15 ஆம் அமர்வில் நேற்று(04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சலுகை அடிப்படையில் விரைவில் டெப்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும். இலங்கையில் டிஜிட்டல் தொழிநுட்பத்திலான பொருளாதாரத்தை உருவாக்குவதே தமது நோக்கம். நாட்டில் WiFi வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டிற்கு தொழில்நுட்ப பிரிவில் சிறந்த பொறியியலாளர்கள் தேவை. தகவல் தொழில்நுட்ப கற்கை நிறுவனங்கள் இலங்கைக்கு தேவை. உற்பத்தி உட்கட்டமைப்பு அபிவிருத்தியையும் விட ஏனைய துறைகளில் வளர்ச்சி அடைவதே அரசாங்கத்தின் நோக்கம். முன்னதாக உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் உட்கட்டமைப்பு வளர்ச்சியுடன் சேர்த்து உற்பத்தி துறை வளர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -