எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காதல் பிரச்சினை காரணமாக இளம் பெண்ணொருவரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபயொருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். முள்ளிப்பொத்தானை, பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரேயே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக காயங்களுக்குள்ளான பெண்ணை காதலித்து வந்த நிலையில் குறித்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்த நிலையிலே வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலையிலும்,கழத்திலும் பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான பெண் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை (12) ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.