இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் பலரினதும் கவனம் திரும்பியிருந்தது.
பிடியொன்றை பெற்றுக் கொண்ட வீரர்கள் அதனை மேலே எறிவது பொதுவாக அனைத்து வீரர்களும் செய்யும் செயல். எவ்வாறாயினும், நேற்றைய போட்டியின் போது ரங்கன ஹேரத்தால் வீசிய பந்தொன்று சிம்பாப்வே அணியின் வெல்லரினால் அடித்தாடப்பட்ட நிலையில், அது கௌசால் சில்வாவினால் பிடியெடுக்கப்பட்டது.
பின்னர் கௌசால் சில்வாவினால் மேலே எறியப்பட்ட குறித்த பந்து ஹேரத்தின் தலையை தாக்கியது. எவ்வாறாயினும் , இதன் காரணமாக ரங்கன ஹேரத்திற்கு எவ்வித உபாதைகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் குறித்த சம்பவம் உள்ளிட்ட நேற்றைய போட்டியின் சிறப்பம்சங்கள் இதோ.