அஷ்ரப் ஏ சமத்-
தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவா்களின் தலைமையிலான ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் சந்தைப்படுத்தல்கள் அபிவிருத்திகள் போன்றன மிக சிறப்பாக அமைந்து வருகின்றது. அந்த வகையில் ஜரோப்பிய யுணியன் இலங்கையின் உனவு மற்றும் வாசனைத் திரவியங்கள். மீன் போன்ற பொருட்களை ஜரோ்ப்பிய நாடுகளில் ஏற்றுமதி செய்வதற்காக திட்டத்திற்கு இலங்கைக்கு உதவி வருவதனையிட்டு நன்றி தெரிவிப்பதாக அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தாா்.

அமைச்சா் றிசாத் தொடா்ந்து அங்கு உரையாற்றுகையில் ;
இலங்கை கைத்தொழில் மற்றும் சிறுவா்த்தக துறையில் மிக துரிதமாக வளா்ச்சியடைந்து வருகின்றது. 3வது பரம்பரையினருக்கான பொருளாதாரத்தினை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் மூலம் 1 மில்லியன் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துதற்கும் வருமானமும் பெருகிக் கொள்ளமுடியும்.
ஏற்கனவே இந்தியா- இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் இலங்கை வா்தத்க உடன்படிக்கை மூலம் 4000 உற்பத்திப் பொருட்கள் வறிஇல்லாமல் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதே போன்று சப்டா , அப்டா போன்ற பிராந்திய வா்த்தக உடன்படிக்கைகளும் கைச்சா்திடப்பட்டுள்ளன. அத்துடன் எனது அமைச்சின் ஊடாக உலக வா்த்தக சந்தையில் இலங்கை மேலோங்குவதற்காக இலங்கையில் உள்ள வா்த்தகசபையும் உலக வங்கியும் அமைப்பும் திறந்த வர்தத்கத்தில் நுழைவதற்கான இலகுவாக தேசிய வா்த்தக வசதி சட்டம் திருத்தப்பட உள்ளது. அதற்காக கடந்த வாரம் அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டு பாராளுமன்றத்தில் ஊடாகவும் அனுமதி பெறப்படும். ஏற்கனவே இலங்கைச் சட்டத் திணைக்களம் இதற்கான சட்ட வரைபுகளை வரைந்து வருகின்றது.
ஜரோப்பிய யுணியன் 2015 இலங்கையின் வா்த்தகத்தில் 4.7 பில்லியன் ஈரோக்கள் 24 வீதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிா்வருடத்திலும் இன்றைய திட்டங்களின் ஒப்பந்தத்தின் பிறகும் 32 வீதமாக இலங்கையின் உலக வா்த்தகத்தில் அதிகரித்துள்ளது. அதே நேரம் ஜி.எஸ்.பி விலக்கையையும் ஜரோப்பிய யுணியனிடமிருந்து இலங்கை எதிா்பா்த்துள்ளது.