திருகோணமலை.தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் கடைகளில் பொருற்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (10) கன்தளாய் நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சானிஜா பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொறவெவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த ஆணொருவரும் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-பர்தா உடையணிந்து முற்சக்கர வண்டியொன்றில் வருகை தந்து பெண்கள் நடாத்தி வந்த கடைகளில் ஒருவர் கதைத்துக்கொண்டிருக்கும் போது மற்றவர் முற்சக்கர வண்டியில் பொருற்களை ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து தம்பலகாமம் போக்குவரத்தை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து முற்சக்கர வண்டியில் சாமான்களை கொண்டு செல்லும் வேளை அவர்களை கைது செய்ததாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.