இன்று 68 வருடங்களின் பின்னர் மிகப் பெரிய நிலாவை காண்பதற்கான சந்தர்ப்பம்

68 வருடங்களின் பின்னர் மிகப் பெரிய நிலவை காண்பதற்கான சந்தர்ப்பம் இலங்கையிலுள்ள மக்களுக்கு கிடைத்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

68 வருடங்களின் பின்னர் பூமியில் இன்றைய தினம் மிகப் பெரிய நிலவை வெற்றுக் கண்களால் அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நிலவினை அவதானிக்கலாம் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30 வீதம் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிகழ்வு 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -