இவ்வாறான நிலையில் டொனால்ட் ட்ரம்பு குறித்து பாக்கிஸ்தானிய ஊடகமான நியோ நியூஸ் புது விதமான செய்தி ஒன்றை வெளியிட்டு பாரிய சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பு பாக்கிஸ்தானை சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அதற்கு சான்றாக ட்ரம்பின் சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
மேலும், டொனால்ட் ட்ரம்பின் உண்மையான பெயர் “தாவூத் இப்ராகிம் கான்” எனவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானின் வர்சிஸ்தான் பகுதியில் பிறந்த டிரம்பு, தனது உண்மையான பெற்றோரை 1954ஆம் ஆண்டு இடம்பெற்ற சாலை விபத்தில் பறிகொடுத்ததார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானில் குழந்தையாக இருந்த டொனால்ட் டிரம்பை, ட்ரம்பின் பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.