அபு அலா -
பொத்துவில் அல் கலாம் மகா வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழாவும் மூன்று மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், இராஜாங்க கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை பொத்துவில் மத்திய கல்லூரியிலும், இர்பான் மகளீர் கல்லூரியிலும் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது.