ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மீள்பார்வை பத்திரிகையின் 20வது வருட பூர்த்தியும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று (16) கொழும்பு-10 தபால் திணைக்கள தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹமட் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதியாக கலந்து கொள்ளவிருந்த தேசிய தகவல் நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருக்குப் பதிலாக அவரின் புதல்வர் அஸாம் பாக்கீர்மாக்காரும், கௌரவ பேச்சாளராக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் றங்க கலன்சூரியவும், கௌரவ அதிதிகளாக அக்குறனை அல்-குர்ஆன் திறந்த கல்லூரியின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர், ஜாமியதுஸ் ஸலாமின் தலைவர் உஸ்தாத் அஸாட் அப்துல் முயீட் உள்ளிட்ட பல புத்தி ஜீவிகள், கல்விமான்கள், பத்திரிகை ஆரிசிரியர்கள், மார்க்க அறிஞர்கள் ஊடகவியலாளர்கள், அரச தனியார் துறைகளின் ஊழியர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மீள்பார்வை பத்திரிகையின் ஆரம்பகால நிறுவுனர்கள் அதற்காக பாடுபட்டவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விஷேட நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மீள் பார்வை பத்திரிகையால் 2017ஆம் ஆண்டிற்கென போதைப் பொருளற்ற தேசம் எனும் தொணிப் பொருளில் இலங்கையிலிருந்து போதைப் பொருளை முற்றாக அகற்றுவது தொடர்பான தகவல்களுடன் விஷேடமாக தயாரிக்கப்பட்ட கலண்டரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.