நாடாளுமன்ற அமர்வில் பொருத்தமில்லாத ஆடையுடன் வந்த MPக்கு நடந்த சம்பவம்...!

நாடாளுமன்ற அமர்வின் போது பொருத்தமில்லாத ஆடையை அணிந்து வந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் குமார் நாடாளுமன்றில் இருந்து வெளியேறினார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், கடுமையான செம்மஞ்சள் நிறத்திலான சேட்டை அணிந்து நாடாளுமன்றிற்கு நேற்றைய தினம் வருகை தந்துள்ளார். 'சேர் நீங்கள் நாடாளுமன்றிற்கு பொருத்தமில்லாத ஆடையை அணிந்து வந்துள்ளீர்கள்' என சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்ட அரவிந் குமார் சபையை விட்டு வெளியேறியுள்ளார். ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான நிறத்திலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் சாரியே அணிய வேண்டும் எனவும் படைக்கல சேவிதர் அனில் சமரசேகர கூறியுள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னதாக பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து நாடாளுமன்றிற்கு வருகைதந்திருந்த இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -