தூக்கம் தொலைத்த கனவுகளால் அபிவிருத்தியை செய்து காட்டினோம் - அதாஉல்லாஹ்

அஷ்மி ஏ கபூர்-
ரலாற்றில் நாம் மேற் கொண்ட பணிகள் அபிவிருத்திகள் தொடர்பில் நாம் மிகுந்த திட்டமிலுடன் மேற் கொண்டு ஒவ்வொரு விடயத்திலும் முன் மாதிரியாக திகழ்ந்திருக்கிறோம். ஒரு அபிவிருத்தி செய்வதாயின் அது பற்றிய பூரண எதிர்கால சந்ததிக்கு பிரயோசனம் அடையக்கூடிய விதத்தில் மேற் கொள்ள வோண்டும்.

தமது தேவைகளுக்கு கட்டடங்களை கட்டி பின்னர் உடைத்தெறிகின்ற நிலைக்கு அரச பணங்களை வீணடிக்க முடியாது இப்பிராந்திய அபிவிருத்தி தொடர்பில் நாம் பல்வேறுபட்ட கனவுகளை கண்டோம். அதுவே எம் முன் ஒவ்வொரு விடயமாக உயர்ந்து நிற்கிறது. 

பாதைகள், வைத்தியசாலை, பாடசாலை, கட்டடங்கள், மாநகரம், என்றெல்லாம்..

அப்துல் கலாம் கனவு காணச் சொன்னதை சிலர் தூக்கத்தில் வருகின்ற கனவு என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கனவு தூக்கம் வரச் செய்யாமல் இருக்கின்ற கனவுகளாக இருக்க வேண்டும் இவ்வாறு அக்கரைப்பற்று பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற லீடர் அதா வெற்றிக் கிண்ண நிகழ்வின் போது தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்பது எங்காவது எமது பிராந்தியத்தில் முழுமையாக செய்யுங்கள். தொட்டம் தொட்டமாக அரைகுறையாக தங்களது அரசியல் தேவைகளுக்காக மேற் கொள்ள வேண்டாம்.

அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில் நாய் திங்கின்ற பிலால் போன்று வேலைகளை செய்து இந்த மாநகரின் மைதானத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். இது பல இழப்புகளை சந்தித்து எழுவட்டுவான் எனும் மைதானத்தை இழந்த வரலாற்றுக்குரியது. இதற்கென்று நாம் பல திட்டமிடலுடன் இருக்கிறோம். எங்கெங்கு எது எது இருக்க வேண்டும் என நினைத்து அதை திரம்பட செய்து காட்டியும் இருக்கிறோம் என்றார்.

ஹிஜ்றா அணி ஏற்பாடு செய்த லீடர் அதா வெற்றிக் கிண்ணம் ஒலுவில் லெவன் ஸ்டார் வசமாகியது. அதே போல் இரண்டாம் இடத்தை பள்ளிக்குடியிருப்பு ரஹிமியா பெற்றுக் கொண்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -