வவுனியாவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு.!



மிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு, கழகத்தின் அமைப்பாளர் திரு வ.பிரதீபன் தலைமையில் கனடா வாழ் சேமமடு உறவுகளின் பங்களிப்புடன், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் இன்றய தினம்(13/10/2016) வெகு சிறப்பாக நடைபெற்றது. .இன்றய நிகழ்வுகளில் முதியோருக்கான பயணப்பொதிகளும், விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த்தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன் உறுப்பினர்களான கெர்சோன் ,சஞ்சீவன், பிரகாஷ்கர் ஆகியோருடன் ஆனந்த இல்லத்தின் நிமலன் மற்றும் ஆனந்த இல்ல முகாமையாளர் திருமதி ஜெயா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -