இன்று காலை 7.15அளவில் மட்டக்களப்பு தனியார் ஜீ.வி வைத்தியசாலை முன்னாலும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட அருகில் மஞ்சள் கோட்டிட்கு அருகில் மக்கள் கடப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த இளைஞர் நிறுத்திய போது அவர்கள் பின்னால் வந்த களுவாஞ்சிக்குடி போலிஸ் வாகனம் மோதியுள்ளது.
இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். இன்னொருவருடைய மோட்டார் வண்டியை இரவலாக கடனாக வாங்கி ஓடிவந்த மகிழடித்தீவைச்சேர்ந்த அமிர்தலிங்கம் தினேஸ்கரன் 18வயது, பின்னாலிருந்துவந்த முனைக்காட்டைச் சேர்ந்த சின்னத்தம்பி வைரமுத்து 48வயது இருவரும் கொக்கட்டிச்சோலையிருந்து ஏறாவூருக்கு கூலி வேலையிற்கு செல்லும் போது சட்டப்பூர்வமாக மஞ்சள் கடவையால் செல்லுவோருக்கு தாமதித்த போது விபத்து நடைபெற்றது.
இதற்கு நீதியான விசாரனை நடைபெறுமா? மேலும் போக்குவரத்து போலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் வாகனத்தையும் மோட்டார் சைக்கிளையும் போலிஸுக்கு கொண்டு சென்றதாக தெறிவிக்கப்படுகின்ரது.


