வற் வரித் திருத்தச் சட்ட மூலம் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றம்....!

வற் வரித் திருத்தச் சட்ட மூலம் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்ட மூலம் தொடர்பில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 53 மேலதிக வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

சட்ட மூலத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கூட்டு எதிர்க் கட்சி சார்ப்பு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஆகியோர் எதிராக வாக்களித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வாக்கெடுப்பு நடாத்தும் போது சபையில் இருக்கவில்லையென குறிப்பிடப்படுகின்றது. மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது சார்பாக 112 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. மூன்றாம் முறை வாக்கெடுப்பு மேலதிக 66 வாக்குகளினால் நிறைவேறியுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -