மட்டக்களப்பில் சிக்கிய வாகனத்தின் பெறுமதி சுமார் 8 கோடி ரூபா - இதன் பின்னணி..?

ட்டக்களப்பு பிரதேசத்தில் குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்று நேற்று கைப்பற்றப்பட்டிருந்தது. பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பினை அடுத்து வாகனம் மீட்கப்பட்டது.

குறித்த வாகனம் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஹொங்கொங் நாட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த மோட்டார் வாகனத்தின் பெறுமதி 78 633 385.00 (சுமார் 8 கோடி) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்சர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மோட்டார் வாகனம் தொடர்பில் சுங்க பிரிவில் அல்லது துறைமுகத்தில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சொகுசு வாகனம் துறைமுகத்தின் ஊடாக மோசடியான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு வரி பணமோ அல்லது அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களோ இந்த வாகனத்திற்காக செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அது மாத்திரமின்றி இந்த வாகனம் அரசாங்க மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திலும் பதிவு செய்யப்படவில்லை. வாகனத்திற்காக எவ்வித காப்புறுதிகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தின் பெயரிலேயே இந்த வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த வாகனம் நேற்றைய தினம் மட்டக்களப்பு வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இருந்த பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிசொகுசு வாகனத்தை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -