சானுக ரத்வத்த உள்ளிட்ட 5 பேருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐவரும், மத்திய வங்கிக்கு சேர வேண்டிய ரூபா 4,200 மில்லியன் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
நிறுவன பாதுகாப்புத் தொடர்பில் மத்திய வங்கியில் வைப்பிடப்படும் குறித்த பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து, மத்திய வங்கியால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.