அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளில் மீண்டும் புதுப்பொழிவு பெறவுள்ள கடற்கரைப்பூங்கா..!

இணைப்புச்செயலாளரின் ஊடகப்பிரிவு-
காத்தான்குடி கடற்கரைப்பூங்காவின் மூன்றாம் கட்ட அபிவிருத்தி வேலைகளுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் மேல் மாகாண அபிவிருத்தி நகர அபிவிருத்தி (Mega polis) அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க 1 கோடி 30 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளார். இந்த கடற்கரைப்பூங்கா தொடர்பில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் தொடர் வேண்டுகோளின் பேரிலே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்கள்.

கடந்த நூறு நாள் அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சராகவிருந்த தற்போதைய நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி கடற்கரைப் பூங்கா அவ் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பெயரில் அமைக்கப்பட்டு இவ்வேலைத்திட்டம் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது பொதுமக்கள் அறிந்ததே. அப்போது அமைச்சை பொறுப்பெடுத்த றவூப் ஹக்கீம் அவர்கள் தனது அமைச்சின் கீழான சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் பகிரங்கக் கேள்வி (Open Tender) முறையில் செய்யுமாறு பணிப்புரை விடுத்ததன் பேரில் இக்காத்தான்குடி கடற்கரைப்பூங்கா அமைப்பதற்காகவும் அதே அடிப்படையில் பகிரங்கக் கேள்வி மூலமே கொந்தராத்துக்காரர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மிகக்குறைந்த கேள்விக்கூறின் அடிப்படையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஹில்மியா கன்ஸ்ட்ரெக்ஸன் கம்பனிக்கே அந்தக் கொந்தராத்து கிடைத்திருந்தது.இவர் பதினெட்டு இலட்சம் ரூபா குறைத்து தனது கேள்வியை சமர்ப்பித்ததாகவும் அதனால் தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.கொந்தராத்துக்காரர் தெரிவில் எந்த அரசியல் செல்வாக்கும் பிரயோகிக்கிப்பட்டிருக்கவில்லை.

பின்னர் இவ்வேலைத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை அவதானித்த இணைப்புச் செயலாளர் முபீன் இக்குறைபாடுகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தவிசாளர் இத்திட்டத்திற்கான பிரதான பணிப்பாளர் மஹிந்த விதான ஆராச்சி மற்றும் உதவிப்பணிப்பாளர் பந்துல ஆகியோரைச்சந்தித்து முறைப்பாடு செய்திருந்தார். இக்குறைபாடுகளை சீர் செய்வதாகவும் மேலதிகமாக மூன்றாம் கட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் வாக்குறுதியளித்திருந்தனர். மேற்படி திட்டத்தில் நிலவிய குறைபாடுகளாக பின்வரும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

1.சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய விளக்குகளில் காணப்பட்ட குறைபாடுகளும் வெளிச்சமின்மையும்.

2.நடப்பட்டுள்ள மரங்கள் முறையாக பராமரிக்கப்படாமை.

3.நடைபாதைகளில் இடைவெளிகள் காணப்படுதல்.

4.பூமி மட்டத்திலிருந்து நடைபாதை உயர்ந்த மட்டத்தில் காணப்படல்.

உள்ளிட்ட திருத்தங்கள் முபீனினால் முன்வைக்கப்பட்டதுடன் கடற்கரையின் பிரதான நுழைவாயிலை அழகு படுத்துதல், பெஞ்ச் இருக்கைகள் அமைத்தல் மற்றும் நடைபாதையை கடற்கரை வீதி அல்மானார் சந்தியைத் தாண்டி வரும் வடக்குப் பக்கமாக நீட்டுதல் போன்ற திட்டமொழிவுகளை முபீன் சமர்ப்பித்திருந்தார்.

இத்தகைய திட்டங்களை ஏற்றுக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகாரசபை விரைவில் இதைத் திருத்துவதாக வாக்குறுதியளித்திருந்தது.

இதனிடையே இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கெதிராக இத்திட்டம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மீண்டும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சென்று அதிகாரிகளை சந்தித்த முபீன் இத்திட்டத்தில் காணப்படும் குறைபாடகளை மீண்டும் விளக்கி கொந்தராத்துக்கு கொடுப்பனவு வழங்க வேண்டாமென கேட்டுக் கொண்டார்.பின்னர் அப்போதைய காத்தான்குடி நகர சபையின் செயலாளர் சர்வேஸ்வரனை சந்தித்து இது தொடர்பில் எழுத்து மூலமான முறைப்பாட்டை நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்குச் செய்து அதன் பிரதிகளை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் மேல் மாகாண அபிவிருத்தி நகர அபிவிருத்தி (Mega polis) அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்கவிற்கும் பிரதியிடுமாறு கூறி 03.08.2016 திகதியிடப்பட்ட மேற்படி கடிதத்தை முபீனே நேரடியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கும் அமைச்சர்களுக்கும் நேரடியாக சமர்ப்பித்திருந்தார். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

இதன் பின்னர் முபீனின் வேண்டுகோளின் பெயரில் கௌரவ அமைச்சர் றவூப் ஹக்கீம் அமச்சர் சம்பிக்க றணவக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோரிடம் பேசி திருத்த வேலைகளுக்கும் மூன்றாம் கட்ட அபிவிருத்தி வேலைகளுக்குமாக 1 கோடி 30 இலட்சம் ரூபாவை இத்திட்டத்துக்காக ஒதுக்கீடாக பெற்றுக் கொண்டதன் பேரில் இப்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிதியொதுக்கீட்டின் கீழ் கடற்கரை அழகுபடுத்தல் நடைபாதை செப்பணிடல் பெஞ்ச் இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பல வேலைகள் நடைபெறவுள்ளன.

இவ்வேலைகளை மேற்பார்வை செய்ய கடந்த 22.09.2016 அன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இராசநாயகம் வருகை தந்திருந்தார்.இவர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கிய எழுத்து மூலமான அறிக்கையின் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் குழு தலைமைச் செயலக பிரதிப் பணிப்பாளர் பந்துல தலைமையில் 29.09.2016 வியாழக்கிழமை காத்தான்குடிக்கு வருகை தந்து இவ்வேலைத்திட்டத்தைப் பார்வையிட்டதுடன் மேற்படி இரண்டு அதிகாரிகள் குழுவினரும் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் எம்.எஸ்.எம்.சபி அவர்களையும் சந்தித்து இத்திட்டம் தொடர்பில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டதாக முபீன் மேலும் தெரிவித்தார்.

துரதிஷ்ட வசமாக ஊரார் கோழியினை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதும் அநாகரிக அரசியலை அரசியலை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழமை போன்று செய்யவுள்ளதாக அறியக்கிடைத்தது.இது தொடர்பில் முபீனின் விரிவான அறிக்கை விரைவில் வெளிவரும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -