மாணவனின் எதிர்காலத்துடன் விளையாடும் ஆசிரியர் - வீடியோ

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வலைய கல்வி பணிப்பளர்களே இது உங்களின் கவனத்திற்கு மாணவர்களின் பிழைகளை கண்டறிந்து அவர்களை நல் வழிப்படுத்துவது ஆசானின் கடமையே தவிர அவர்கள் செய்யும் தவறுகளை படம் பிடித்து விளம்பரம் செய்வதல்ல.

ஓர் மாணவன் அதுவும் அறியா வயதில் பிழை செய்கின்றான் என்றால் அவனுக்கு பக்குவமாய் புத்திமதி கூறுவது அல்லது அவனுடைய பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதனை உதறி தள்ளிவிட்டு அவனை விசாரனை செய்வதனை படமெடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் போடுவதனால் இவர்கள் சாதிக்க நினைப்பதுதான் என்ன?

இந்த சம்பவத்தின் அவமானத்தினால் இனிவரும் காலங்களில் இம்மாணவன் பாடசாலைக்கு செல்லவில்லை என்றால் அதற்கு குறிப்பிட ஆசியரியர் பொறுப்பேற்பாரா?? அல்லது குறித்த ஆசிரியரானவர் தனது பிள்ளையோ அல்லது குடும்பத்தில் இருக்கின்ர பிள்ளையையோ இவ்வாறு வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தனது பெயரிற்கு நற்பெயர் வரும் என முயற்சிப்பாரா??

இத்தனைக்கும் குறித்த ஆசிரியர் கடமையாற்றும் கல்வி வலைய கல்வி பணிப்பாளரும் உண்மையாக ஆசிரியர் தொழிலினை ஆசிரிய தர்மமாக நினைத்து கற்பிக்கின்ற எமது சமுகத்தில் உள்ள ஆசிரியர்கள் அணைவரும் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை அல்லது எவ்வாறான ஒழுக்காறு நடவடிக்கையினை குறித்த வீடியோவினை வெளியிட்டு மாணவனின் எதிர்காலத்தில் விளையாடியுள்ள ஆசிரியருக்கு எதிராக எடுக்க போகின்றார்கள்: என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

துணிச்சல் மிக்க குளந்தை முகத்துடன் எதுவித பயமுமில்லாமல் ஆசியருக்கு முன்னால் நின்று பதிலலிக்கும் குறித்த ,மாணவனின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -