கடைசி பந்தை தவறாக அடித்த தோனி: புலம்பல்

மெரிக்காவில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டி லாடெர்ஹலில் நடந்தது. முதலில் தடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணி வீரர் லிவிஸ் 48 பந்தில் சதம் அடித்தார். 

ஜான்சன் சார்லஸ் 79 ஓட்டங்கள் எடுத்தார். கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரகானே (7 ஓட்டங்கள்), விராட்கோலி (16 ஓட்டங்கள்) ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா-லோகேஷ் ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இதனால் ஓட்டங்கள் மளமளவென்று ஏறியது. ரோகித் சர்மா 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து களம் வந்த தலைவர் டோனி அதிரடியாக விளையாடினார். லோகேஷ் ராகுல் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதனால் இலக்கை நோக்கி இந்தியா சென்றது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரில் முதல் 5 பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அதை எதிர்கொண்ட டோனி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி ஒரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து தலைவர் டோனி கூறியதாவது:- 

இது ஒரு அற்புதமான ஆட்டம். கடைசி பந்தை சரியாக கணித்தேன். ஆனால் அதை செயல்படுத்துவதில் தவறு செய்துவிட்டேன். நாம் செயல்படுத்தும் விதம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நாங்கள் பலவற்றை சரியாகவே செய்தோம். நல்ல பார்ட்னர் ஷிப்பும், ஓவருக்கு 12 ஓட்டங்கள் வீதம் எடுத்தோம். அனைவரும் நன்றாக துடுப்பெடுத்தாடினர். ஏனென்றால் 250 ஓட்டங்கள் இலக்கை சேசிங் செய்வது எளிதானதல்ல. வெற்றி பெற்று இருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்றார். 

கடைசி ஓவரை வீசிய வெய்ன் பிராவோ கூறுகையில், கடைசி கட்டத்தில் டோனி என்ன செய்வார் என்பதை அறிவோம். கடைசி பந்தை மெதுவாக வீச முடிவு செய்தேன். டோனி முன்னேறி வருவதை பார்த்ததும் மெதுவாக வீசினேன். அதற்கு பலன் கிடைத்தது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -