பரீட்சை உதவி மேற்பார்வையாளர் மாரடைப்பால் மரணம்..!

க.கிஷாந்தன்-
டைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பண்டாரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

04.08.2016 அன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், 52 வயதான ஒருவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் கடமையிலிருந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மாணவர்களின் பரீட்சைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகளின் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -