கூட்டு எதிா்கட்சியில் இருப்பவா்கள் யாா்..? இவா்கள் கள்வா்கள் - ரஞ்சன் ராமநாயக்க

அஷ்ரப் எ சமத்-
ந்த நாட்டின் அபிவிருத்தி அல்லது மக்களது நலனில் அக்கரையில் அரசாங்கத்தை தட்டி கேட்பதற்கு எதிா்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், ஜே.வி.பி தலைவா் அனுகுமார திசாநாயக்க போன்றோா் கொண்ட ஒரு பலமான எதிா்கட்சி இந்த நாட்டில் இருக்கின்றது . இந்த கூட்டு எதிா்கட்சியில் இருப்பவா்கள். யாா் இவா்கள் கள்வா்கள், மக்களின் சொத்துக்களையும் இந்த நாட்டின் வளங்களையும் மத, கலை, கலாச்சாரங்களை அழித்து இனங்களை மோத விட்டு அதில் குளிா்காய்ந்தவா்கள். 

இவா்கள் கடந்த காலத்தில் செய்த தமது கொலை, களவு, . இந்த நாட்டின் வளங்கள் நிதி மோசடி அதிகார துஷ்பிரயோகங்களை செய்தவா்கள் தான் இந்த கூட்டு எதிா்கட்சியினா். இவா்களது களவுகளை அரசாங்கம் சிறுகச் சிறுக முன்னெடுப்பதை தவிர்ப்பதற்கும் தமது சுயநலத்திற்காகவே இவா்கள் இதில் இருந்து தப்புவதற்கும் கண்டியில் இருந்து கொழும்புக்கு பாதை யாத்திரை மேற்கொள்கின்றனா், இவா்கள் இங்கு காட்டுவது எங்களை கைது செய்தால் எங்களுக்கு பின்னாள் பாரிய மக்கள் சக்தி இருப்பதை காட்டுவதற்காக ? ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கு 62 அரை இலட்சம் வாக்குளை மக்கள் அளித்துள்ளனா். 

ஒரு பலமான அரசினை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனா். இந்த பாத யாத்திரையிலும் மகிந்த அணியினா் மீண்டும் தோல்வியடைவாா்கள். இவா்களுக்கு இந்த அரசாங்கம், நீதி நியாயம் தண்டனை வழங்காவிட்டால் இவா்கள் செய்த கொடுமைகளுக்கு தெய்வமாவது தண்டனை வழங்கும். என எனது நம்பிக்ககை என பிரதியமைச்சா் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தாா்.

மேற்கண்டவாறு இன்று (1) ஜ.தே.கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநட்டில் பிரதியமைச்சா் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தாா்.

அவா் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

பாராளுமன்ற உறுப்பிணா் நாமல் ராஜபக்ச ரகா் வீரா் - வசீம் தாஜீடீனை உயிரோடு வைத்து நடு வீதியில் கொலை செய்தவா், தாஜீடீனின் ஆன் உறுப்பைக் கூட வெட்டியவா். இதற்காக பொலீஸ், சட்ட வைத்திய சான்றுகளை செய்வதற்கு உத்தரவிட்டவா், இவா் களவாக தமது தந்தையின் ஜனாதிபதி பலத்தைப் பயண்படுத்தி சட்டத்தரணி பட்டத்தைப் பெற்றவா். யோசித்த ராஜபக்ச என்பவா் யாா், ? 3 கோடி ருபா செலவில் அரச நிதியில் கடற்படையில் பயிற்சிக்காக செலவழித்துள்ளது. இப்போது அவா் அந்த பதவியில் இல்லை. அவ்வாறாயின் அவருக்கு மக்களது வரிப்பணத்தில் செலவளித்த பணத்தினை யாா் கட்டுவது? அவா் சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் தலைவராக இருந்து இந்த நாட்டின் விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக மில்லியண் கணக்கில் சம்பாதித்தவா். இந்த நாட்டின் அழகான 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் கற்பை சூரையாடியவா்கள், கோட்டல்களில் உல்லாசமாக இருந்து நடனமாடி குடித்து கும்மாளமிட்டவா்கள். 

இவா்கள்தான் பாத யாத்திரையில் செல்கின்றனா். இந்த நாட்டின் பொதுச் சொத்துக்களை கோடிக்கணக்கான பணத்திற்காக விற்ற கள்வா்கள். இவா்கள் இப்போது பாதை யாத்திரை என்ற போா்வையில் தமது களவுகளை துஸ்பிரயோகங்களை மறைப்பதற்கும் தமது தணிப்பட்ட சுயநலனுக்காக பாதை யாத்திரை என்ற போா்வையில் வீதியில் இறங்கியுள்ளனா். இவா்கள் நடு வீதியிலும் மது அறுந்தி நாட்டியம் ஆடி சாதாரண மக்களை வேறு திசைக்கு திரும்புகின்றனா். 

இந்த அரசு அமைச்சரவை ஏற்படுத்தி இன்னும் 1 வருடம் கூட ஆகவில்லை. இவா்கள் இந்த அரசுக்கு எதிராக விடும் கோசம் என்ன ? ரணிலை வீட்டுக்கு அனுப்புவோம், என்று கோசமிடுகின்றனா். இவா்கள் கோசமிட்டு நாளை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவும், பிரமராக நாமல் ராஜபக்சவும் நிழல் அமைச்சரவையும் நியமிக்க முடியுமா ?

அன்று கண்டியில் மடவளையில் வைத்து 8 முஸ்லீம் இளைஞா்களை கொலை செய்து விட்டு ரொஹான் ரத்வத்த கண்டி மீராம் மக்காம் பள்ளியில் ஜனாதிபதியுடன் இருக்கின்றனர். இந்த விமல் வீரவன்ச, உதயன் கம்மவில் போன்றோா்கள் இந்த நாட்டில் சிறுபாண்மை மக்களுக்கு எதிரான இனத் துவேசிகளும் பள்ளிவாசலுக்குள் இருக்கின்றனா். நாமல் ராஜபக்ச கிரிஸ் கோட்டல் காணிக்காக 82 மில்லியண் ருபா கையாடியிருக்கின்றாா். இதனை சன்டே லீடரில் எழுதிய மஹிந்தா என்ற ஊடகவியலாளரின் வீட்டுக்கு இரானுவத்தை அனுப்பி அவரை அச்சுறுத்தினாா். இந்த நாடடில் 62 அரை இலட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி மைத்திரியின் வெற்றியின் கீழ் ்இந்த நாட்டில் பெரும்பாண்மை அரசு இந்த அரசு இதனை பொருக்க முடியாமல் இருக்கின்றனா். இவா்களது சூது, களவு நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்குகளுக்கு மில்லியண் கணக்கில் பணம் பெற்று நீதிமன்றம் வழக்காடும் சட்டத்தரணிகளும் கள்வா்களை பாதுகாக்காமலும் இந்த நாட்டின் நீதி நியாயம் தர்மத்தினை மதித்து கள்வா்களுக்கு நீதி வழங்க விடுங்கள், 

இவா்கள் தமது அரச பலத்தில் இருக்கும்போது ரஹா் விலையாட்டில் இவா்களை தவிர வேறு எவரும் வீரராக இந்த நாட்டில் விளையாட முடியாது . தெய்வம் தான் காப்பாற்றினான் கிரிக்கட் விளையாட்டிலும் இவா்கள் விளையாடி இருந்திருந்தால் மகள ஜெயவா்த்தன முரளி சங்கக்கார போன்றோா்களை நடு வீதியில் வைத்து வெட்டி கொலை செய்திருப்பாா்கள் . 

இவா்கள் செய்த அக்கிரமங்களுக்கு எதிராகத்தான் மக்கள் மைத்திரிபால சிறிசேனாவையும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரிலான அரசை ஆட்சி பீடம் ஏற்றினாா்கள். இவா்கள் இனி ஒருபோதும் அரசியலில் வராத அளவுக்கு மேலும் ்இவா்கள் தோற்கடிக்கப்படுவாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -