கொரா கொரர ரணில் கெதர அரிமு : இதுதான் மகிந்த அணியின் பாத யாத்திரை கோசம் - பாலித்த

அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிா்கட்சியினா் கண்டியில் இருந்து கொழும்பு வரை பாத யாத்திரையில் 2 மில்லியன் மக்களை கூட்டி வருவோம் என்றனா். ஆனால் அங்கு வந்த மக்களின் தொகை:  ஊடக மற்றும் கணககெடுப்பின் படி ஆக 14 ஆயிரம் பேரே அழைத்து வந்தனா். கண்டியில் இருந்து கொழும்புக்கு ஆகக் குறைந்தது 1 இலட்சம் மக்களாவது கூட்டி வர முடியவில்லை. அப்படி வந்திருந்தால் கூடி முழுக் கொழும்பும் சன நெறிசலாக காட்சியளிக்கும் . ஆனால் முழுக் கொழும்பின் சனத்தொகையே 2.7 மில்லியண்களாகும். இவா்கள் என்ன சொல்லி வந்தாா்கள் ” கொரா கொரர ரணில் கெதர அரிமு ”கள்ளன் கள்ளன் ரணிலே வீட்டுக்கு போ”  இதுதா இவா்களது பாத யாத்திரை கோசம். அது மட்டுமல்லாமல் பாடசாலை மாணவா்கள் சிறுவா்கள் எல்லாம் இதற்கு அழைத்து வந்துள்ளாா்கள்.

நேற்று முன்தினம் அவா்களுக்குள்ளேயே நீர்கொழும்பில் ஒரு மாகாண சபை உறுப்பிணரும் பிரதேச சபை உறுப்பிணரும் உணவகம் ஒன்றில் வாக்குவாதப்பட்டு துப்பாக்கியை நீட்டி மாகாண சபை உறுப்பிணா் பொலிசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா்கள் சண்டை பிடித்தது ஊா்வலத்துக்கு ஏன் நீ கூடிய சனங்களைக் கொண்டு வரவில்லை என்றே வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அடி பிடி நடந்துள்ளது. இதனை அங்கு இருந்த சீ.சீ.டி கமாரவில் பதியப்பட்டுள்ளது. . இதில் இருந்து விளங்குகின்றது. இவா்களுக்கு பின்னால் பணகொடுத்தும் இவா்களுக்கு பின்னாள் சன கூட்டம்  இல்லை. என்பது தெளிவாகின்றது. 

என இராஜாங்க அமைச்சா் பாலித்த ரண்க பண்டார நேற்று (4) ஜ.தே.கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் நடாத்திய ஊடகவியலாளா் மாநாட்டில் தெரிவித்தார்.

அவா் மேலும் அங்கு தெரிவிக்கையில் ;-

அத்துடன் 2 மில்லியன் சனங்களை கொண்டுவருவதற்கு காலிமுகத்திடல் என்று சொன்னாா்கள். இவா்கள் எங்கு கூட்டம் கூடுவது முடிப்பது என்ற ஒரு திட்டம் இல்லை. இவா்கள் திட்டம் படு தோல்வியடைந்துள்ளது இவா்களுக்கு கூட்டம் நடாதத்துவதற்கு கெம்பல் பாா்க் கொடுக்கப்பட்டது. அங்கு அடக்குவதற்கு சனம் இல்லாதால் நான்கு மூலை பாதைகளில் சனங்களை ஒடுக்கி லிப்டன் சுற்று வட்டத்தினைக் கமராவுக்குள் அடக்குவதற்கு 14ஆயிரம் மக்களை அடக்கி காட்டியுள்ளாா். ஆனால் அங்கு 14ஆயிரத்திற்கும் குறைவான மக்களே அங்கு வந்திருந்தனா். கொழும்பை பிடிப்போம் என்றாா்கள் இவா்களுக்கு கொழும்பில் 5 ஆயிரம் சனம் கூட இவா்களுக்கு பின்னால் இல்லை. இவா்கள் பின்னால் அரச ஊழியா்கள், பல்கலை மாணவா்கள், சாதாரண தொழிலாளிகள், தணியாா் துறையினா் யாராவது இவா்களுடன் இல்லை.

எமது அரசு அரச ஊழியா்களுக்கு 10 ஆயிரம் ருபா சம்பள அதிகரிப்புச் செய்துள்ளது. அத்துடன் பல்கழைக்கழக மாணவா்களுக்கு 5 ஆயிரம் ருபா மகாபொல புலமைப் பரிசில் வழங்கியுள்ளது. தணியாா் துறையின ஊழியா்களுக்கு 2500 ருபா சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சா் ஜனாக்கா பண்டார தென்னக்கோன் சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றதைக் காணக் கூடியாதாக உள்ளது. பாடசாலை மாணவா்களை பாதைக்கு அழைத்து வீதி நாடகம், மதுபாணம் பாவணை போன்றவற்றில் ஈடுபடுவதைக் கூட இன்றைய பத்திரிகையில் கிரிஸ்த்துவ மத பெரியாா் மல்கம் ரண்ஜித் காடினா் கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.

அத்துடன் இந்த மகிந்த ராஜபக்ச 2000க்கும் மேற்பட்ட பௌத்த மத குருமாா்களை கொண்டுவருவதாகச் சொன்னனாா். சிங்கள ராவய பொது பல சேன 150 ஆமதுரு மாா்களே அங்கு இவா்களுடன் இருந்தனா். அது மட்டுமல்லாமல் சிறிலாங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தின் வழியாகச் சென்று அக் கட்சிக் கராியலயத்திற்குள் புகுந்து கூக்குரல் இட்டாா்கள். இந்த மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி காலத்தில் சரத் பொண்சேகாவை சிறையில் அடைக்கும் போது அதில் இருந்த கூடுதலான பொளத்த ஆமதுரு மாா்கள் ஜனாதிபதிக்கு விரோதத்தையும் எதிா்ப்பையும் தெரிவித்தா்கள். அந்த பௌத்த சாசன ஆமதுரு மன்றத்தினை இரண்டாகப் பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்தாா். இவா் சுனாமியின் போது ஹம்பாந்தோட்டையில் நிதி மோசடி குற்றம் இழைத்தவா் என இராஜாங்க அமைச்சா் அங்கு தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -