யாழ். ஊர்­காவற்­று­றை­யி­லி­ருந்து காரை­நகருக்கு கடல் வழிப்பாதை திருத்த வேலை ஆரம்பம்..!

பாறுக் ஷிஹான்-
யாழ். ஊர்­காவற்­று­றை­யி­லி­ருந்து காரை­நகர் செல்­வ­தற்­கான கடல்­வழிப் பாதைக்­கான பாலம் அமைக்கும் பணிகளால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இத்திருத்த வேலை காரணமாக பாதுகாப்பற்ற படகு சேவை மூலம் மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
வழமையாக மேற்கொள்ளப்படும் பாதை சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காரணம் பாலம் அமைக்கப்படும் நடவடிக்கை ஏற்கனவே பாதை செலுத்தப்பட்ட வழியில் மேற்கொள்ளப்படுகின்றமையினால் ஆகும்.
இதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பற்ற படகு குறித்து அதில் பயணம் செய்யும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தற்போது இப் பால­ நிர்மாணிப்பு பணி மீள்­கு­டி­யேற்ற மற்றும் புனர்­வாழ்வு அமைச்­சி­ன் நிதி உ­த­வி­யுடன் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் மேற்­கொள்­ளப்­ப­டுகிறது. இந்தப் பால­ம் 450 மீற்றர் நீள­மா­ன­துடன் இதனை அமைப்­ப­தற்கு சுமார் 1500 மில்­லியன் ரூபா செல­வாகும் எனவும் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. 

குறித்த பாலம் அமைக்கப்பட உள்ள நிலையில் மக்கள் இவ்விரு இடங்களிற்கும் பாதுகாப்பற்ற படகு சேவையில் தங்கள் பயணங்களை செய்கின்றனர். எனவே இது குறித்த உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றர். குறித்த பாலம் அமைக்­க­ப்ப­டு­வ­தன் ­காரணமாக மக்கள் விரை­வா­கவும் இல­கு­வா­கவும் தமது பய­ணங்­களை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். இது­வரை காலமும் இரண்டு பகு­திகளுக்­கி­டை­யி­லான போக்­கு­வ­ரத்­தா­னது பாதை (படகு வகை) ஊடா­கவே மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் தற்­போது பாலம் அமைப்­பதற்­காக கடலின் தரை­ய­மைப்பு எவ்­வா­றுள்­ளது என்­பதை பரிசோ­திக்கும் நட­வ­டிக்கை ஆரம்­பி­க்கப்பட்டுளளதுடன் அது நிறை­வ­டைந்­ததும் பாலத்­திற்­கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு அவற்றை கட்டு வதற்கான கட்டுமானங்கள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -