தரம் 5 புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு..!

இம்றான் றியாஸ்-
Youthaid Aid social service association ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது .

இதில் எமது யூத் எயிட் தலைவர் MHM. இம்ரான் தலைமையில் இடம் பெற்றது.இக் கருத்தரங்கை எமது ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சி தொகுப்பாளர் பாணந்துறை அல் பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் ARM. ஜிப்ரி (SLEAS) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது இதில் கல்குடா பிரதேசத்தில் இருந்து சுமார் 8 பாடசாலைகளும் 350 க்கு மேற்பட்ட மாணவ மாணசிகளும் இந்த இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு மாத்திரம் அல்லாமல் மாணவர்களுக்கான போட்டிகளும், சுவாரஸ்யமான கேள்வி பதில்களும் இடம் பெற்றது இந்த போட்டிகளில் சரியான விடையளித்த மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது இந்த கருத்தரங்கு பி.ப 2.00 மணிதொடக்கம் இரவு 8.30 மணிவரை நடைபெற்றது.

இந்த இலவசக் கருத்தரங்குக்கு எமக்கு உதவி புரிந்து அனுசரணையாளர்களாக வாழைச்சேனை ஹைறாத் ட்ரான்ஸ்போட் நிருவாகத்தினர், மற்றும் கல்குடா தொகுதி மு.கா உயர்பீட உறுப்பினர் மதிப்புக்குரிய HMM ரியாழ், கி.மா சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களும் மாவடிச்சேனை அஸ்மி அவர்களுக்கும். மற்றும் எங்களுக்கு உதவிபுரிந்த அனைத்து பாடசாலைகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் எமது அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் YOUTH AID SOCIAL SERVICE ASSOCIATION சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -