2017ஆம் ஆண்டில் புதிய வற் வரி முறை அறிமுகப்படுத்தப்படும் - நிதியமைச்சா்

அஷ்ரப் ஏ சமத்-
.தே.கட்சியின் இளம் தொழிலாளா் அமைப்பினால் நேற்று (24) கொழும்பு கெப்பேக்கடுவை கூட்ட மண்டபத்தி்ல் அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் அதற்குப் பிறகும் என்ற தலைப்பினால் கலந்துரையாடல் ஒன்றை கொழும்பில் நடாத்தியது.

இக் கலந்துரையாடலில் - அரசினான தற்போதைய அரச, பொருளாதார, வெளிநாட்டு மற்றும் முதலீடுகள் பற்றிய கொள்கைகள் முன்றேற்றங்கள் பற்றிய கலந்துரையாடலும் இளம் உத்தியோகத்தா்களது கேள்விகளும் இங்கு நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு இளம் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிணா் ஹர்சன ராஜகருநாயக்க தலைமை வகித்தாா். இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளார்களாக நிதியமைச்சா் ரவி கருநாயக்க, பிரதி வெளிநாட்டு அமைச்சா் கலாநிதி ஹா்சா டி சில்வா சிரேஷ்ட ஊடகவியலாளா் சன்டே ஒப்சேவா் - பிரதி ஆசிரியா் தில்ருக்சி, கலந்து கொண்டனா் இந் நிகழ்ச்சியை எம்.ரீ.வி செய்தியாளா் - மஜீத் நெறிப்படுத்தினாா்

இங்கு கருத்து தெரிவித்த பிரதி வெளிநாட்டு அமைச்சா் - 

முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு உலக நாடுகளில் அபகீா்தியே இருந்து வந்தது. தற்பொழுது போட்டி போட்டுக்கொண்டு புதிய அரசின் வெளிநாட்டுக் கொள்கையினை உலக நாடுகள் பரந்த அளவில் ஏற்றுள்ளனா். உலக நாடுகளில் தற்போதைய ஜனாதிபதி பிரதமா் வெளிநாட்டுக் கொள்கையை மதிக்கின்றனா். உதாரணமாக நான் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்தேன் கடந்த வாரம், அமேரிக்காவிற்கு சென்றிந்தேன். அதுவும் நான் வெளிநாட்டு பிரதி அமைச்சா் மட்டும் தான் ஆனால் அங்கு 1 நாளிலேயே அமேறிக்காவின் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உலக பொருளாதார முதலீட்டாளா்கள் 7 போ் எனக்காக காத்திருந்தனா். என்னைச் சந்தித்து உரையாடுவதற்காக. அதே போன்றுதான் கடந்த மாதம் 27 நாடுகள் கொண்ட ஒர் கூட்டத்திற்குச் சென்றபொழுது அங்கு குழுமியிருந்த 27 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சா்களும் இலங்கை தற்போதைய வெளிநாட்டுக் கொள்கையும். இலங்கை கண்டு வருகின்ற அபிவிருத்தியை பாராட்டி மெச்சி பேசினாா்கள். 

இலங்கையில் இஸ்ரேல் துாதுகரம் உள்ளதைப்பற்றி ஊடகவியலாளா் கேள்வி எழுப்பினாா் இதற்கு பதிலளித்த பிரதி வெளிநாட்டு அமைச்சா் - பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடுகளின் துாதுகரகங்களும் இரு நாடுகளிலும் உள்ளன. அதேபோன்று தான் கொழும்பிலும் இரண்டு நாடுகளின் துாதரகங்கள் இயங்குகின்றன. இலங்கையில் வியாபாராம், பொருளாதாரம் தொழில் வாய்ப்புக்களில் இலங்கைக்கு சம தா்ம அந்தஸ்த்தில் வைத்து பாா்க்கப்படுகின்றது. ஆனால் இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்குத் பாதகம் விளைவிக்காமல் இஸ்ரேலுடன் தொடா்புகள் வைக்கப்படும். 

அமைச்சா் ரவி கருநாயக்கா-

2017ஆம் ஆண்டில் புதிய வற் வரி முறை அறிமுகப்படுத்தப்படும். தற்பொழுது இந்த நாட்டில் உற்பத்தியில் இலாபம் இல்லை. கடந்த 3 வருடத்திற்கு முன் எடுத்த கடண்களை 21 வீதத்தை அடைத்து வருகின்றோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பெற்றோல், கேஸ் உட்பட 10 பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டது. உலக நாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு முதலீட்டாளாா்கள் ஆர்வம் காட்டுகின்றனா். மீன் உற்பத்தியில் ஜரோப்பிய யூனியன் ஏற்றுமதி செய்வதால் மீன் பிடியாளா்களுக்கு நன்மை கிட்டுகின்றது. சகல பாதைகள் பாலங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. என நிதியமைச்சா் அங்கு தெரிவித்தாா்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -