வூஸ்க்கினால் (WUSC) அம்பாறை மாவட்டத்தில் ICT துறையை மேன்படுத்த போரம் உதயம்..!

எம்.வை.அமீர்- 
ICT தொடர்பான தொழில் வழங்குனர்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் ஒன்றிணைத்து Business Stakeholders Sector Forum ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பான துறைசார்ந்தவர்களுடனான சந்திப்பு ஒன்றினை வூஸ்க் நிறுவனம் 2016-07-29 ஆம் திகதி மாளிகைக்காடு விஸ்மில்லா வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

வூஸ்க் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் செ.ஜெசுசகாயம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக வூஸ்க் நிறுவனத்தின் கிழக்குமாகாண குழுக்களின் தலைவர் மயில்வாகனம் யோகேஸ்வரன் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதியாக சிம்ஸ் கேம்பஸின் நிறைவேற்றும் பணிப்பாளர் அன்வர் முஸ்தபாவும் கலந்து கொண்டனர்.

பல்வேறு தொழில்துறைகளை முன்னேற்றும் நோக்கில் பல முயச்சிகளை முன்னெடுத்துவரும் வூஸ்க் நிறுவனம், எதிர்காலத்தில் ICT துறையை மேன்படுத்துவதனூடாக அதனோடு தொடர்புபட்ட தொழில் துறைகளையும் விருத்தி செய்யும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தில் அதற்கான போரம் ஒன்றினை அதனோடு தொடர்புபட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கியது. இதில் தலைவராக ஏ.பி.முஜீனும் செயலாளராக ஏ.எம்.நௌபலும் பொருளாளராக எம்.வை.அமீரும் உபதலைவராக ராஜேந்திரனும் உபசெயலாளராக எஸ்.எம்.ஹாஜாவும் நிருவாக உறுப்பினர்களாக எம்.எல்.எம்.வாஹிடும்,ஏ.எல்.அனஸ் அஹமட், ஐ.எல்.எம்.இர்பான் மற்றும் எம்.எம்.நப்சார் ஆகியோரும் ஆலோசகராக சிம்ஸ் கேம்பஸின் நிறைவேற்றும் பணிப்பாளர் அன்வர் முஸ்தபாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -