பயிற்சிநெறிக்காக மலேசியாவுக்குச் செல்லவுள்ள அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் ரஞ்சித் ஆற்றிய உரை..!

கஹட்டோவிட்ட ரிஹ்மி -
"ஒரு நாடு வளர்ச்சியடைய சிறந்த அரசியல் பார்வை ஒன்று இருக்க வேண்டும். ஆனால், அவ்வளர்ச்சியை மேலும் பிரயோசனமாகப் பயன்படுத்துவது நாட்டிலுள்ள திறமையான அரச அதிகாரிகளாலேயே முடியும். இன்று நாட்டிற்கு சிறந்தவொரு அரசியல் பாதை கிடைத்துள்ளது. நாங்கள் அரசாங்கம் என்றவகையில் சரியான திசையை நோக்கி நாட்டைக்கொண்டு செல்வதைப் போன்று சிறந்தவொரு அரச சேவையினை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டமொன்றினையும் தொடங்கியுள்ளோம். தற்போது அரச ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்காக சர்வதேச நாடுகள் பலவற்றுடன் நாம் உரையாடியுள்ளோம். இவற்றை நாம் செய்வது வினைத்திறனுடனும் ஒழுக்கத்துடனும் கூடிய அரச சேவையினை நாட்டினுள் ஏற்படுத்துவதற்காகும். இந்த வௌிநாட்டுப்பயிற்சிக்காக நாம் அனுப்புவது பொதுமக்களின் வரிப்பணம் மூலமாகும். அவ்வாறு நாம் செலவழித்து அனுப்புவது, நீங்கள் மீண்டும் நாட்டிற்கு உற்பத்தித்திறனுடன் கூடிய சேவையை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையிலாகும். இந்த வௌிநாட்டுப்பயிற்சிக்காக செல்லும் அதிகாரிகளின் உற்பத்தித்திறன் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் சென்ற அமைச்சரவைக்கூட்டத்தில் உத்தரவிட்டார். நாங்கள் இவையனைத்தையும் நாட்டிற்காக சிந்தித்துச் செய்யும் விடயங்கள் என்பதால், நீங்களும் உங்களது கடமையைத் திறம்படச்செய்யவேண்டும்." என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் தெரிவித்தார். சென்ற வாரம் 36 அரச அதிகாரிகள் பயிற்சிநெறியில் பங்குபற்றுவதற்காக மலேசிய நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்னர் அவர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வுரையாடல் அமைச்சின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சி நெறியானது அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இதற்கு 36 அரச அதிகாரிகள் அமைச்சுக்கள், மாகாண அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண அரச நிறுவனங்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இப்பயிற்சி நெறியானது, நிர்வாக அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு நடைபெறுவதுடன், அதற்குள் கிராமிய அபிவிருத்தித் திட்டம், ஏழை மக்களை மேம்படுத்தும் மலேசிய முறைமை பயிற்சி என்பனவும் உள்ளடங்கும். இப்பயிற்சியானது மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் 10 தினங்கள் நடைபெறவுள்ளதோடு, அதனுடன் இணைந்ததாக சிங்கப்பூர்க்கு சுற்றுலா ஒன்று செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "எதிர்வரும் 4 ஆண்டுகள் எமது நாட்டிற்கு மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த நேரத்தில் நாம் பாரிய பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டியுள்ளது. இன்று நம் நாட்டிற்கு சர்வதேச ரீதியில் பாரிய வரவேற்புக்கிடைக்கின்றது. அதே போன்று சர்வதேச நிதியுதவியும் கிடைக்கின்றது. நாங்கள் இதனைச் செய்வது, பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்த்தை அடைவதற்கு. இந்த நேரத்தில் அரச அதிகாரிகள் என்ற வகையில், உங்களது அர்ப்பணிப்பானது எங்களது அரசுக்குத் தேவைப்படுகிறது. ஒரு நாட்டில் எவ்வளவு சிறந்த அரசியல்வாதிகள் இருந்தாலும், சிறந்த அரச அதிகாரிகள் இல்லாவிடின் அந்த நாட்டிற்கு அபிவிருத்தியை நெருங்கவும் முடியாது. தற்போது சில அதிகாரிகள் கூறுகிறார்கள், எப்.சீ.ஐ.டி. இனால் தங்களுக்கு வேலை செய்வதற்குப் பயம் என்று. நான் சொல்வது என்னவெனில், சரியாக, நேர்மையாக ​வேலை செய்யும் எந்தவொரு அதிகாரியும் அதற்குப் பயப்பட அவசியம் இல்லை. பயப்படவேண்டியவர்கள், திருட்டும் ஊழலும் செய்பவர்களேயாவர். 

இப்பயணத்தில் நீங்கள் கற்றுக்கொள்பவற்றை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். அடுத்ததாக, இப்பயணத்தில் மலேசியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கான காரணங்களை கவனமாகத்தேடிப்பாருங்கள். நமது நாட்டின் நெருக்கடியைக் கடக்க அதுவொரு சிறந்த பாடமாக இருக்கும்." என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -