கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி : நிந்தவூர் வீரர் புதிய சாதனை..!

சுலைமான் றாபி-
2016 ம் ஆண்டின் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் வீரர் எம்.ஐ.எம். அசான் 21 வயதிற்குற்பட்ட ஆண்கள் பிரிவில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றதோடு, புதிய சாதனையும் நிலைநாட்டி சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 27 ம் திகதி முதல் 30ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ண பொது மைதானத்தில் இடம்பெற்ற இம்மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் போதே எம்.ஐ.எம். அசான் மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவற்றுள் 21வயது ஆண்கள் பிரிவு குண்டுபோடுதலில் 11.32 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், முப்பாய்ச்சலில் 13.70 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், பரிது வட்டம் வீசுதலில் 29.74 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டதோடு இப்பிரிவின் மாகாண சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இது தவிர கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் முப்பாய்ச்சலின் சாதனைப் பதிவாகக் காணப்பட்ட 12.87 மீற்றர் எனும் பழைய சாதனையை முறியடித்து, முப்பாய்ச்சலில் 13.70 மீற்றர் தூரம் எனும் புதிய சாதனையை கல்முனை கல்வி வலயம் சார்பாகவும், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை சார்பாகவும் பதிவு செய்து பெருமை சேர்த்துள்ளதோடு தான் அங்கம் வகிக்கும் நிந்தவூர் லகான் விளையாட்டுக்கு கழகத்திற்கும் பெருமையினை சேர்த்துள்ளார்.

மேலும் இதே பாடசாலையினைச்சேர்ந்த ஏ.ஏ. ஆதிப் அஹமட், 17வயது ஆண்கள் பிரிவு முப்பாய்ச்சலில் 11.73 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் ஒன்றினையும் பெற்றுக்கொண்டதோடு இவ்வீரர்களின் விளையாட்டுத் திறமைக்காக இப்பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம். ஜாபிர், உடற்கல்வி ஆசிரியர்களான ஏ. ஹலீம் அஹமட், எம்.பி. மஹ்ரூப், ஏ.பி நளீம், ஏ.சி. நவாஸ் மற்றும் எச். ஜெமீன் ஆகியோர்கள் தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -