சவுதியில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - கணவருக்கு சிறை

வுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம், கணவர் பணியாற்றிய பெட்ரோலிய தொழிற்சாலை ஒன்றின் குழாயில் காணப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் மீட்கப்பட்டதாக சவுதி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்படுவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக சட்ட வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அமெரிக்க பிரஜை தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -