அமைச்சர் நசீரின் அதிரடி : திருகோணமலையில் அபிவிருத்தி : ஹக்கீம் பங்கேற்பு

சப்னி அஹமட்- 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஞயாயிறு(31) திருகோணமலை மாவட்டத்தின் சுகாதார திட்டங்களை ஆரம்பித்து வைக்குமுகமாகவும், சுகாதார அமைச்சால் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அன்றைய நிகழ்வுகள் யாவும் காலை 9.௦௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளது, ஆரம்பிக்கவுள்ள சேவைகள், தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டு நிகழ்வு, மூதூர் அறபா நகர் ஆயுர்வேத மத்திய மருந்தகம் திறப்புவிழாவும், அத்தோடு அறபாநகர் அம்மன் நகர் பிரதான வீதி நிர்மானப்பனிக்கான ஆரம்ப வைபவமும், மூதூர் தக்வாநகர் கிராமோதய மத்திய மருந்தகத்திற்க்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, மூதூர் தள வைத்தியசாலையின் நோயாளர் விடுதி திறப்பும், மூதூர் தள வைத்தியசாலைக்கான ஓ – சுயல இயந்திரம் கையளிப்பும், வைத்திய நிபுணர்கள்இதாதியர்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டல், கிண்ணியா தள வைத்தியசாலையின் நோயாளர் விடுதி திறப்பு, திருகோணமலை புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான வைத்திய நோயாளர் விடுதி திறப்பு மற்றும் ஆயுள் வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா .என பல சேவைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் எவ தெரிவித்தார்

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சட்டத்தரணி கௌரவ ஜே.எம்.லாகிர், கௌரவ அன்வர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், பணிப்பாளார்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -