பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் மூதூர் வலய கல்வி பணிப்பாளர் மன்சூர்..!

அஹமட் இர்ஷாட்-
கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது தேசிய ரீதியிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மொழி வைத்திய நிபுணர்களும் வைத்திய அதிகாரிகளும் உறுவாகுவதற்கு காரணமாக இருந்து வருகின்ற பிரபல்ய உயர்தர உயிரியல் பாட ஆசிரியரும் திருகோணமலை மாவட்ட மூதூர் வலயக் கல்வி பணிப்பாளருமான எம்.கே.எம்.மன்சூர் மீது சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஆசிரியை உடனான பலியல் குற்றச்சாட்டு மற்றும் பாடசாலை தளபாட கொள்வனவு சம்பந்தமான ஊழல் என்பன செய்திகளாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இது சம்பந்தமான உண்மை நிலையினை அறிந்துகொள்ளும் பொருட்டு குறிப்பட்ட வலய கல்வி பணிப்பாளரான எம்.கே.எம்.மன்சூரினை இன்று 25.07.2005 திங்கட் கிழமை நேரடியாக சந்தித்து அவருடைய கருத்துக்களை வினவிய பொழுது ஏ.எல்.எம்.முக்தார் என்பவருக்கும் எனக்கும் இடையில் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இவ்வாறான கட்டுக்கதைகளை திட்டமிட்டு செய்திகளாக்கி என்னை சமூகத்தில் இருந்து ஒரங்கட்ட வேண்டும் என்பதற்காக முக்தார் என்கின்ற நபர் தன்னுடைய இளைய சகோதரனான அஸ்லம் என்பவரை வைத்து உறுவாக்கிய நாடகம் என்பதனை ஆணித்தரமாக கூறினார் மூதூர் வலய கல்வி பணிப்பாளருமான எம்.கே.எம்.மன்சூர். 

குறிபிட்ட குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக வலய கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரிடம் கேற்கப்பட்ட கேள்விகளுக்கு அவரினால் வழங்கப்பட்ட விடைகளும் அதனுடைய விரிவான காணொளியும் எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேள்வி:- உங்கள் மீது சுமர்த்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டினை நீங்கள் ஏற்று கொள்கின்றீர்களா?

எம்.கே.எம்.மன்சூர்:- இதனை நான் முற்று முழுதாக உறுவாக்கப்பட்ட வதந்தியாகவும், திட்டமிடப்பட்ட சதியாகவுமே பார்க்கின்றேன். பொதுவாக ஒரு ஆசிரியர்களுக்கும் வலய கல்வி பணிப்பாளருக்கும் இடையில் எவ்வகையான தொடர்புகள் இருக்கின்றதோ அதனை ஒட்டிய உறவுதான் எனக்கும் குறிப்பிட்ட ஆசிரியைக்கும் இடையில் இருக்கின்றது. இதனுடைய முழு நோக்கமும் என்னை அவமானப்படுத்தும் நடவடிக்கையாகத்தான் இருக்கின்றது. சிறிது காலங்களுக்கு முன்னர் மாகாண பணிப்பாளர் ஒருவர் சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தது சம்பந்தமன காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த குறிப்பிட்ட காணொளியினை தான் வெளியிட்டதாக கருதியே இவ்வாறான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டினை என் மீது சுமத்துகின்றனர். அக்குறிப்பிட்ட காணொளியானது எனக்கும் கிடைக்கப்பெற்றது. அதன் மூலம் அவர் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்காலம் என்பது ஊகிக்க கூடிய விடயமாகவும் இருக்கின்றது.

அதனால் குறித்த விடயத்தில் சம்பந்தப்படவர்கள் என்னை பழிவாக்குவதற்காக இவ்வாறான கட்டுக்கதையினை உறுவாக்கியிருக்கின்றார்கள். எனக்கு எதிரான செய்தியில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை பார்க்கின்ற பொழுது என்னை அவர்கள் பின் தொடர்ந்து வந்ததாகவும் உல்லாச விடுதியில் பார்த்ததாகவும் அழகான முறையில் சோடித்து வடிவமைத்து எழுதியிருக்கின்றார்கள். ஒரு விடயத்தினை இங்கு கவணத்தில் எடுத்தோமேயானல்… இந்த நாவீன உலகில் என்னை பின் தொடர்ந்து வந்தவர்கள் அவர்களின் கைகளில் உள்ள நவீன தொலைபேசிகளின் மூலம் வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதனை விட்டு விட்டு இவ்வாறு எனக்கு எதிரான செய்திகளை சோடித்து சமூக வலைத்தளங்களுக்கு அனுப்பியுள்ளனர். அது மட்டுமல்லாமல் உல்லாச கோட்டல்களில் பல வகையான நவீன சீசீ.டிவி கமராக்கள் பொறுத்துதப்பட்டிருக்கும். அத்தொடு நான் எனது காரில்தான் பயணிப்பேன். ஆகவே எனக்கு எதிரான குற்றச்சாட்டினை சுமர்த்துபவர்கள் மிகவும் இலேசான முறையில் என்னை வீடியோ செய்திருக்கலாம் என்பது எனது கருத்தாக இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே இதனுடைய உள் நோக்கம் என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் சோடிக்கப்பட்ட அவமானப்படுத்தும் செயலாகவே காணப்படுகின்றது.

கேள்வி:- இச்செய்தியினை வெளியிட்டதாக நீங்கள் கூறும் நபரான முக்தாருடைய சகோதரருக்கும் உங்களுக்கும் ஏதும் தனிப்பட்ட கோபதாபங்கள் இருக்கின்றதா?

எம்.கே.எம்.மன்சூர்:- எனக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சனைகள் ஏதும் இருந்ததும் இல்லை அவர் எனக்கு பாரிய அளவில் அறிமுகமும் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட செய்தி சம்பந்தமாக கூறப்படுகின்ற ஏ.எல்.எம்.முக்தார் என்பவருக்கும் எனக்கும் இடையில் நிருவாக ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணமாக முக்தார் என்கின்ற நபர் அரசாங்கத்திற்கு எதிராக பல வழக்குகளை தாக்கள் செய்துள்ளர். அவ்வாறான வழக்குகளின் நான் அரச சார்பில் ஆஜராகி அரச சார்பாக குறித்த வழக்குகளை கையாண்டுள்ளேன். அந்த வகையில் அவர் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்த பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு தோல்வியில் முடிவுற்றுள்ளது.. அந்த வகையிலே குறித்த முக்தார் எனும் நபர் என்னுடன் முரண்பட்ட நிலையில் இருக்கலாம் என நினைக்கின்றேன். அத்தோடு குறித்த முக்தார் எனும் நபர் பல இடங்களுக்கு இடமாற்றப்பட்டு தற்பொழுது அம்பாறை வலயத்தில் பணியாற்றி வருக்க்ன்றார். இதற்கும் நான் தான் காரணம் என அவர் நினைக்க கூடும். அந்த வகையிதான் கல்முனையில் வசிக்கின்றவர் மூதூரில் பணிபுரிக்கின்ற எனக்கு எதிராக அவருடைய சகோதரனை வைத்து இவ்வாறான செய்தியினை பிரசுரித்திருப்பதானது நகைப்புக்கிறியதாக இருக்கின்றது. 

கேள்வி:- சம்மாந்துறை கல்வி வலயத்தில் நீங்கள் பணிப்பாளராக இருந்த காலத்தில் பாடசாலை தளபாட கொள்வனவில் ஊழல் செய்ததாக குற்றம் சுமர்த்தப்படுகின்றதே?

எம்.கே.எம்.மன்சூர்:- குறித்த தளபாட கொள்வனவானது யுனிசெப் நிறுவனத்தினுடைய ஐந்து இலட்சம் பெருமதியான நிதியின் மூலம் இடம்பெற்ற விடயமாகும். குறித்த நிதியானது வருட இறுதி பகுதியில் கிடைக்கப்பெற்றதினால் மாணவர்களுடைய நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டு குறித்த நிதியானது வங்கியில் வைப்பிலிடப்பட்டது. அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் குறித்த நிதியானது வங்கியிலிருந்து மீழ் எடுக்கப்பட்டு பாடசாலை தளபாடங்கள் கொள்வனவு செய்து பாடசாலைகளுக்கு வழங்கியிருந்தோம். அந்த தளபாட கொள்வனவு சம்பந்தமாக யுனிசெஃப் நிறுவனம் திருப்தி அடைந்து எங்களுக்கு சான்றுதலும் வழங்கியிருக்கின்றார்கள். மாகாண கல்வி பணிமனை ஊடகவும் எங்களுடைய கொள்வனவு சம்பந்தமாக திருப்தி அடைவதாக சான்றுதல் வழங்கியுள்ளார்கள். இவ்வாறு வருட இறுதியில் பாடசாலை அபிவிருத்திகளுக்காக பணம் பெற்றுக்கொள்ளப்படுகின்ற சமயத்தில் அதனை வங்கிகளில் வைப்பு செய்து அடுத்த வருட முதல் பகுதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது கல்வி வலயங்களில் இடம் பெறுகின்ற சாதராண விடயங்களாகும். 

கேள்வி:- உங்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக கூறப்படுகின்றதே?

எம்.கே.எம்.மன்சூர்:- நீங்களும் என்னிடம் கல்வி கற்றவர் என்ற ரீதியில் உங்களுக்கு நன்றாக தெரியும் என நினைக்கின்றேன். எனக்கு எவ்விதமான அரசியல் பின் புலமும் கிடையாது. நான் சாதரணமக பாடசாலையில் கல்வி கற்று திறந்த போட்டி பரீட்சை மூலம் சித்தியடைந்து விரிவுரையாளராக கடமை புரிந்திருக்கின்றேன். அதற்கு பிற்பாடு முதலாம் தர வகுபிற்கு முன்னேறி சட்டரீதியாக யாருடைய தயவும் இன்றி இந்த பதவியினை அல்லாஹ்வின் உதவியினால் வகித்துக்கொண்டிருக்கின்றேன். எனக்கு அரசாங்க நிதியினை கொல்லை அடித்து குடும்பத்தினை நடாத்துவதற்கு எந்த தேவையும் கிடையாது. ஆகவே எனக்கு அரசியல் பின்புலம் இருக்கின்றதாகவும் அதனூடகத்தான் நான் ஊழல் செய்து விட்டு தப்பித்து கொள்வதாவும் கூறப்படுகின்ற இவர்களுடைய செய்திகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். 

கேள்வி:- இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்னால் ஏதும் அரசியல் பின்னணி இருக்கின்றதா? அல்லது முக்தாரினுடைய ஒட்டு மொத்த நாடகம் என கருதுகின்றீர்களா? 

எம்.கே.எம்.மன்சூர்:- நான் பொதுவாக எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அரசியல் வாதிகளுடன் சுமுகமான உறவினை பேனிவருகின்ற ஒருவன். பொதுவாக அரசியல்வாதிகள் எப்போதாவது என்னிடம் தொடர்பு கொண்டு இடமாற்றம் சம்பந்தமாகவே பேசுவார்கள். சில இடமாற்றங்கள் உண்மையில் செய்ய முடியாதவைகளாகவே இருக்கின்றது. அது சம்பந்தமாக நாங்கள் சுமூகமான முறையில் அரசியல்வாதிகளிடத்தில் விளக்கமளிப்போம். ஆகவே என் மீது சுமர்த்தப்பட்டுள்ள பிரச்சனைக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதோடு அவர்களுக்கு அதற்கு நேரமும் கிடையாது.. ஆகவே இது தனிப்பட்ட சில மனிதர்களுடைய திட்டமிடப்பட்ட செயற்பாடாகும். 

கேள்வி:- இந்த பாலியல் குற்றச்சாட்டினை நீங்கள் மானசீக ரீதியாக எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

எம்.கே.எம்.மன்சூர்:- என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு நான் முகம் கொடுத்துள்ளேன். அதனால் நான் கலங்கி கொள்வதுமில்லை அலட்டிக்கொள்வதுமில்லை. எனது வழமையான போக்கிலே நான் பயணித்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த முறை இவ்வாறான குற்றச்சாட்டானது எனது குடும்பத்திற்கும் முக்கியமாக எனது மனைவிக்கும் பாரிய மன உளைச்சலினை கொடுத்துள்ளது. தொலைபேசியில் உங்களுடைய கணவனை கொலை செய்ய போகின்றோம் என எனது மனைவியினையும் பிள்ளைகளையும் மிரட்டும் பானியில் மன உளைச்சலை கொடுக்கின்றமையாது என்னை மிகவும் பாதித்துள்ளது.

கேள்வி:- உங்கள் மீது சுமர்த்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்ற என்னங்கள் ஏதும் இருக்கின்றதா?

எம்.கே.எம்.மன்சூர்:- உண்மையில் இந்த விடயம் சம்பந்தமாக என்னுடைய சட்டதரணியுடன் கலந்தாலோசித்துள்ளேன். ஆகவே சட்டதரணியினுடைய ஆலோசனையின் படி நான் இயங்க இருக்கின்றேன்.

வீடியோ வலய கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரினுடைய நேரடி கருத்துக்கள்:- 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -