பாசிக்குடாவில் சுற்றுலாத்துறை அமைச்சால் சமாதானம் மற்றும் நல்லிணக்க மாநாடு...!

ந.குகதர்சன், நாச்சியாதீவு பர்வீன்-
க்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் மாநாடு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவில் செவ்வாய்கிழமை இடம் பெற்றது.

சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மதவிவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் சுற்றுலா அபிவிருத்தியில் சமாதானமும் நல்லிணக்கமும் என்ற தலைப்பில் பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் இடம் பெற்றது.

இதன்போது மாநாடு தொடர்பான ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியினை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ வாசித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகான ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அருந்திக பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் தாலிப் ரிபாய், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மதவிவகார அமைச்சின் செயலாளர் ஜானக சுஹததாஸ, ஜோர்தான் பெட்ரா நஷினல் ரஸ்ட்டின் தவிசாளர் பிரின்செஸ் டானா பிராஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதி நிதிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

11.07.2016ம் திகதி இரவு ஆரம்பமான இம்மாநாடு 14.06.2016 வியாழக்கிழமை முடிவுறவுள்ளதுடன், நிகழ்வின் தலைவரும், அமைச்சருமான ஜோன் அமரதுங்கவினால் அதிதிகளுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -