உங்களிடம் காசு இருக்கலாம்.. அறிவு இருக்கலாம்.. ஐடியா இருக்கிறதா..?

ஜுனைத் எம் பஹ்த் -
ங்களிடம் காசு இருக்கலாம்.. அறிவு இருக்கலாம்.. ஐடியா இருக்கிறதா..? அதனை வழங்குவதற்காகத்தான் இந்த Motivation நிகழ்ச்சி என்ற அறிமுக வசனத்துடன் தன்னம்பிக்கை மஸாகி அவர்களால் இறையுதவியுடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'உலக அரங்கில் நீங்கள் யார்..?' என்ற தன்னம்பிக்கை தொழில்நுட்ப வழிகாட்டல் நிகழ்ச்சியின் முதலாவது அரங்கு (1st - Episode) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கடந்த 29.07.2016 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மழை காரணமாக அரைமணி நேரம் தாமதித்தே பி.ப.4.30 மணியளவில், ஆரம்பமான பெண்களுக்கான அரங்கில் - பிள்ளை வளர்ப்பு, சுயதொழில், இணையத் தேடல், மருந்தாகும் உணவுகள் போன்ற பிரதான தலைப்புக்களில் காட்சிகளுடன் விளக்கமளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பி.ப.7.30 மணியளவில், ஆரம்பமான ஆண்களுக்கான அரங்கில் - பாடசாலை மற்றும் அனுபவக் கல்வி, தற்கொலைக்கான தீர்வு, ஒன்லைன் வேலைவாய்ப்பு, வியாபார வெற்றிக்கான படிமுறைகள், சமூக வலைத் தளங்களின் மறுபக்கத்திலுள்ள பெருந் தரவு ( Big Data ) பற்றிய விளக்கம், எதிர்கால தொடா தொழில்நுட்பம், வீடுவரை வந்துள்ள Google Street View யில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை, விவசாயம் மற்றும் உற்பத்தியில் நாம் செலுத்தவேண்டிய கவனம், புத்துருவாக்குணர்களை ( Innovators ) ஊக்குவிக்க எடுக்கவேண்டிய முயற்சிகள் போன்ற பல்வேறு தலைப்புக்களிலும் தன்னம்பிக்கை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் - இறைவன் மனிதனுக்கு விஷேடமாக வழங்கிய ஆறாம் அறிவைக் கொண்டு, உலகத்தில் எத்தகைய பிரமாண்டமான சாதனைகளை நிகழ்த்தலாம்..? எமது தேடல்களை அதிகப்படுத்தும்போது எமக்கும் எம்மைச் சுற்றி வாழும் மக்களுக்கும் எந்த வகையில் நாம் பயனுள்ளவர்களாக மாற முடியும்..? எமது உள்ளங் கையில் இருக்கும் மொபைல் தொழில் நுட்பம் என்ற யன்னல் கண்ணாடியால், உலகின் பல்வேறு பரிணாமங்களை எவ்வாறு பார்க்க முடியும்..? உலகின் மொத்த சனத்தொகையில் ஆகக்குறைந்தது 100 கோடி மக்களுடைய தகவல்கள் பரிமாறப் பட்டாலும் அத்தகைய பிரமிக்கத்த தரவுத் தளத்திலிருந்து எமக்குத் தேவையானதை எவ்வாறு தேட முடியும்..?

உலகை வெல்லக் கூடிய நாளைய தலைவர்களாக பிள்ளைகளை வளர்த்தெடுக்க அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும்..?

தொழில் நிறுவனங்களை எவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வெற்றிகரமானதாக மாற்ற முடியும்..? சமூகத்தில் ஊடுருவியுள்ள சீதனப் பிரச்சனைக்கு மன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சாரங்களைப் போன்றே மாற்றுத் திட்டங்களில் சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் எவ்வாறு தங்களது வீரியத்தை இன்னமும் அதிகரிக்க வேண்டும்..?

வெளிநாடுகளுக்கு செல்வதால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது என்றால், அதற்கு மாற்றீடாக உள்நாட்டில் அதிக வருமானம் பெறக் கூடிய வழிகளை எவ்வாறு உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்..?
வெளிநாடுகளிலிருந்து கஸ்டப்படும் கணவன்மார்களின் உழைப்பை வீணடிக்காது மனைவிமார் எவ்வாறு புரிந்துணர்வுடன் ஆறுதல் கொடுப்பவர்களாக செயற்படவேண்டும்..?

போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் விடையாக - இளைஞர், யுவதிகள் மற்றும்
ஏனையோருக்கு தன்னம்பிக்கையளித்து, இறைவன் உதவியால் - அவர்களது கல்வி, அவர்களது தொழில், அவர்களது குடும்பம், அவர்களது கனவு, அவர்களது எதிர்காலத்தை வளமுள்ளதாக கட்டியெழுப்பி பல சாதனைகளைப் படைக்கக் கூடிய வகையில் பல அறிவுபூர்வமான கருத்துக்கள் 'தன்னம்பிக்கை - மஸாகி' அவர்களால் வழங்கப்பட்டது.

அத்துடன், கனவுகள் எத்தனை பெரிதாக இருக்கவேண்டும்..? என்பதற்கு உதாரணமாக - கடந்த வருடம் தன்னம்பிக்கை-மஸாகி ( மஸாஹிம் ) அவர்களால் 100 உள்ளக வேலைவாய்ப்பு மற்றும் 1000 சுயதொழில் களை ஏற்படுத்தும் முகமாக 1 கோடி ரூபா பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு தொடங்கிவைக்கப்பட்ட BusyLanka Project - 2020 ஐந்தாண்டு கால திட்டத்தின் தற்போதைய அடைவுகள் பற்றியும் இந் நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோல் - காத்தான்குடி வரலாற்றில் முதன்முறையாக முஹாஸபா மீடியா நெட்வேர்க் யினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த உலக அரங்கில் நீங்கள் யார்..? என்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சி ( Motivation Program ) ஆனது மக்களுக்கு ஒரு புதிய அறிமுகமற்ற நிகழ்வாக இருந்தபோதிலும், அன்றைய தினம் திடீர் மழை காரணமாக மக்கள் வருகை மந்தமாக இருக்கலாம் என நம்பப்பட்ட நிலையிலும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இறுதிவரை இந் நிகழ்வை கண்டுகளித்தார்கள்.

இதுபற்றி, இதன் சகல ஏற்பாடுகளையும் பொறுப்புடன் வழிநடாத்திய முஹாஸபா நெட்வேர்க்கின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஜூனைத்.எம்.பஹத் ஊடகங்ககளுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “ஏண்டா பிறந்தோம்..? எதுக்காக வாழ்கின்றோம்..? எம்மால் எதை சாதிக்க முடியும்..? என பல்வேறுபட்ட மன உளைச்சல்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் மத்தியில் “மன மாற்றத்தைக் கொண்டுவந்து அடுத்தவருக்கும் உதவும் விதத்தில் - ஒரு அறிவியல் ரீதியிலான தன்னம்பிக்கை வழிகாட்டலை கொடுக்கவேண்டும்..” என்று நாங்கள் எடுத்த முதல் முயற்சிக்கு இறைவன் கொடுத்த வெற்றியாகும் என்று கூறினார்.

அத்துடன் - எமது இந்த முயற்சி முதல் முயற்சியாயினும் தம்மீது நம்பிக்கை வைத்து இந் நிகழ்ச்சிக்காக அணுசரணை வழங்க முன்வந்தவர்களையும், தனக்கு உதவியாகவும் பலமாகவும் இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு உறுப்பினர்களான சஷ்னி, றிப்கி, ஹசீன், அஸாம், றஸான் போன்றவர்களையும் எமது பொதுவான அழைப்பை ஏற்று வருகை தந்த அதிகளையும், சக ஊடக நண்பர்களையும் இதர தொழில்நுட்ப ஏனைய ஒத்துளைப்புக்களை வழங்கியவர்களையும் பெண்கள் ஒழுங்குபடுத்தலில் பொறுப்பாக செயற்பட்ட யுவதிகளையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அதேபோல், தற்போது காத்தான்குடியில் அந்த பிரதேச மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட எமது உலக அரங்கில் நீங்கள் யார்..? இந் நிகழ்வின் முதலாவது அரங்கமானது, எதிர்வரும் காலங்களில் மாவட்டம், மாகாணம் ஏன் தேசியமும் கடந்து உலக அளவில் இன, மத, மொழி கடந்து அனைவராலும் விரும்பப்படும் ஒரு தன்னம்பிக்கை அறிவியல் அரங்கமாக இறைவன் உதவியால் வளர்ச்சி பெறும் என தான் நம்புவதாக தன்னம்பிக்கை-மஸாகி அவர்கள் குறிப்பிட்டார்.

இந் நிகழ்ச்சியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அரங்கின் முக்கிய காட்சிகள் அடங்கிய DVD இறையுதவியுடன் - விரைவில் வெளிவர உள்ளதால், தேவையானவர்கள் முன்கூட்டியே  +94770741849 என்ற இலக்கத்திற்கு Whatsapp / SMS / Call மூலமாக தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் ஏற்பாடர்கள்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -