நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் முதன் முறையாக இரு சத்திர சிகிச்சைகள்..!

முஹம்மட் ஜெலீல்-
நிந்தவூர் ஆதர வைத்தியசாலையில் முதல் முறையாக மயக்க மருந்து கொடுத்து "ஹேர்னியா மற்றும் ஹைரேசில். போன்ற இரு சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக 22-07-2016ல் நடைபெற்றது .

இச்சத்திர சிகிச்சையானது நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்(M.S) திருமதி.எ.ஷகிலா அவர்களின் தலைமையில் Dr. ரவிந்திரன் (சேர்ஜன்) அவர்கள், Dr.றியாஸ், Dr.கபூர் உதவிகளோடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இது தொடர்பாக வைத்திய நிபுணர் திருமதி எ.ஷகிலா (M.S) அவர்கள் கூறுகையில் நிந்தவூர் மக்கள் முன்னர் இதுபோன்ற சத்திர சிகிச்சை மேற்கொள்வதாயின் கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்திய சாலைக்கு அல்லது அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு சென்றே இச்சத்திர சிகிச்சை பெறவேண்டியிருந்தது. தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இச்சிகிச்சை இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் வெகு விரைவில் முற்று முழுதாக மயக்க சத்திர சிகிச்சை இங்கு ஆரம்பிக்கபடுமென வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார். 

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக மயக்க மருந்து கொடுத்து வெற்றிகரமாக ஹேர்னாயா, சத்திர சிகிச்சை இடம்பெற்றமைக்கு பாராளுமன்ற உறுப்பினரும் சுகாதார பிரதி அமைச்சருமான கௌரவ பைசால் காசிம் மற்றும் மாகண சபை உறுபிபானரும் சுகாதார அமைச்சருமான கௌரவ நசீர் அவர்களும் வைத்தியர்களை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -